மகேந்திரநாத் குப்தர்

மகேந்திர நாத் குப்தர்
பிறப்பு(1854-07-14)14 சூலை 1854
கல்கத்தா, இந்தியா
இறப்பு4 சூன் 1932(1932-06-04) (அகவை 77)
கல்கத்தா, இந்தியா
அறியப்படுவது’ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ நூல்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சீடரான மகேந்திர நாத் குப்தர் ’ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ நூலின் ஆசிரியர். இவர் 1854 ஜுலை 14 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் தேதி, நேரம் உட்பட எழுதி வைத்த நாட்குறிப்புகளின் தொகுப்பே ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ என்னும் நூல். இவர் பிரம்ம சமாஜத் தலைவர் கேசவ சந்திர சேனின் உறவுப் பெண்ணான நிகுஞ்ச தேவியை திருமணம் செய்தவர். கல்கத்தா பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1882 பிப்ரவரியில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். அப்போது ஈசுவர சந்திர வித்தியாசாகரின் சியாம் பஜார் கிளைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ம- என்பது இவரது பெயரின் சுருக்கமாகவும் புனைப்பெயராகவும் அமைந்தது. அமுதமொழிகளில் இவர் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 375-398
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya