மக்கள் ஊடகம்பொது ஊடகம் (mass media) என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும். ஒலிபரப்பு ஊடகம் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன. இலக்கவியல் ஊடகம், இணையம், நகர்பேசித் தளங்கள் ஆகிய இருவகை பொதுத் தொடர்பாடலைக் கையாள்கிறது. இணையம் வழியிலான ஊடகங்களாக மின்னஞ்சல், சமூக ஊடகம் சார்ந்த இணையதளங்கள், வலைத்தளங்கள், இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன அமைகின்றன. பிற பல பொது ஊடகங்களின் வெளியீட்டு முனையங்கள் கூடுதலாக இணைய வலைத்தளங்களிலும் தோன்றுகின்றன. இவ்வகையில் இணையத் தொலைக்காட்சி விளம்பரங்கள், திறந்தவெளியில் QR குறிமுறைகளைப் பகிர்தல், அச்சு ஊடகத்தில் இருந்து இணையவழியாக நகர்பேசியுடன் இணைதல் ஆகியன உள்ளடங்கும். இம்முறையில், இவை இணையச் சேவையின் அணுகுதிறத்தயும் பரப்பல்திறமைகளையும் பயன்கொள்ளமுடிகிறது. இதனால், தகவலை உலகமெங்கும் பல வட்டாரங்களுக்கு மலிவாகவும் விரைவாகவும் ஒலிபரப்பமுடிகிறது. திறந்தவெளி ஊடகங்கள் (Outdoor media) பல்வேறுவகைகளில் தகவலைப் பரப்பமுடிகிறது. இவ்வகையில் மெய்நிகர் விளம்பரங்கள்; குறும்பலகைகள்; இயங்கும் வீச்சுவரிகள்; பறக்கும் குறும்பலகைகள் ( வரிசையான வானூர்திக் குறிகள்); உள், வெளிப் பேருந்துப் பலகைகள், வணிகக் கட்டிடங்கள், கடைகள், விளையாட்டு அரங்குகள், சாலைச் சீருந்துகள், or தொடர்வண்டிகள்; குறிப்பலகைகள்; வானெழுதல் ஆகிய ஊடகங்கள் அடங்குகின்றன.[1] அச்சு ஊடகங்கள் (Print media) தகவலை நூல்கள், நகைத்துணுக்குகள், இதழ்கள், செய்திதாள்கள், குறுநூல்கள், படங்கள் ஆகியவற்றால் பரப்புகின்றன.[2] நிகழ்ச்சி ஏற்பாடு செய்தலும் மேடைப்பேச்சும் கூட பொது ஊடகங்களே ஆகும்.[3] இந்தத் தொழில்நுட்பங்களைக் கட்டுபடுத்தும் நிறுவனங்களாகிய திரைப்படக் கூடங்கள், பதிப்பக்க் குழுமங்கள், வனொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய்வையும் பொது ஊடகங்கள் எனப்படுகின்றன.[4][5] நாடுதழுவிய வானொலி சேவைகள், நாளேடுகள், இதழ்கள் அல்லது தாளிகைகள்கள் ஆகியவற்றின் அறிமுகத்தோடு, 1920 களில் பொது ஊடகம்(mass media) என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது. பொது ஊடகம் என்று சொல்லத்தக்க புத்தகங்கள் போன்றவை, இக்கருத்துரு உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே உள்ளன. இவை அனைத்துமே ஓரிடத்தில் சிறு குழுவினர், செய்தியையோ தகவலையோ தொகுத்து, மறுமுனையில் பெருமளவிலான மக்களுக்கு வழங்கும் ’ஒருமுனைய’ ஊடக வகையைச் சேர்ந்தவை. தற்காலத்தில் இணைய நுட்ப வளர்ச்சியின் விளைவாக, பொது ஊடகத்தின் தன்மையே, வியக்கத்தக்கவாறு மாறி உள்ளது. மரபார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இணையான தாக்கத்தை, இணையத்தின் வழியாக புது ஊடகமும் செய்யக்கூடியதாகி இருக்கிறது. படிப்பவராகவும் கேட்பவராகவும் இருந்துவந்தவர்கள், ஊடகப் பயனீட்டாளர்கள் ஆகி, இப்போது அவர்களே செய்தியை வழங்குவோராகவும் தவறாக வெளியிடப்படும் செய்தியை அவ்வப்போது குறிப்பிட்டுச் சரிசெய்யவும் சாத்தியம் உருவாகியிருக்கிறது. இதனால், ஒரு முனை ஊடகம் இருமுனை ஊடகமாக மாறியிருக்கிறது. வரையறைச் சிக்கல்கள்20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பொது ஊடகம் எட்டுப் பொது ஊடகத் தொழில்நுட்பங்களாக வகைபடுத்தப்பட்ட்து: அவை நூல்கள், இணையம், இதழ்கள், திரைப்படங்கள், செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, ஒலி ஒளிப் பதிவுகள் என்பனவாகும். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏற்பட்ட இலக்கவியல் தொடர்பாடல் தொழில்நுட்பப் புரட்சி எந்தெந்த ஊடகங்களை பொது ஊடகமாக்க் கொள்ளலாம் எனும் வினவலை எழுப்பியது. எடுத்துகாட்டாக, இந்த வரையறைக்குள் கலப்பேசிகளையும் கணினி விளையாட்டுகளையும் காணொலி விளையாட்டுகளையும் சேர்க்கலாமா என்பதில் முரண்பாடு எழுந்தது. 2000 களில் "ஏழு பொது ஊடகம்" எனும் வகைபாடு பரவலாகியது.[சான்று தேவை] அவை அறிமுகமாகக் கீழே தரப்படுகின்றன:
ஒவ்வொரு பொது ஊடகமும் தனக்கெனத் தனி உள்ளடக்கமும் படைப்புக் களைஞர்களும் தொழில்நுட்பர்களும் வணிக அமைப்பும் கொண்டுள்ளது. எடுத்துகாட்டாக, இணையம் தன்பொது பகிர்வு வலையமைப்பில் வலைப்பூக்கள், podcasts, வலைத்தளங்கள், மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. ஆறாம், ஏழாம் ஊடகங்களாகிய இணையமும் நகர்பேசியும் இலக்கவியல் ஊடகங்கள் எனப்படுகின்றன; நான்காம், ஐந்தாம் ஊடகங்களாகிய வானொலியும் தொலைக்காட்சியும் பரப்பு ஊடகங்கள் எனப்படுகின்றன. காணொலி விளையாட்டுகளும் தனிப் பொது ஊடகமாக வளர்ந்துவிட்டது என வாதிடுகின்றனர்.[6] தொலைபேசி இருமுனைய ஊடகமாகும். ஆனால், பொது ஊடகம் பலமுனை ஊடகமாகும். மேலும், தொலைப்பெசி கலப்பெசியாகி இணையத்துடனும் இணைந்துவிட்டது. எனவே கலப்பேசிகள் அனைத்தும் பொது ஊடகமா, அல்லது இணையம் எனும் பொது ஊடகத்துடன் இணையும் கருவி மட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. பேசியின் பயனர் விரும்பாதபோதும் சந்தைப்படுத்துவோரும் விளம்பரதாரரும் செயற்கைக்கோள் தொடர்பாடலைப் பயன்படுத்தி நேரடியாக கலப்பேசிக்குள் தம் விளம்பரங்களைப் பரப்புகின்றனர்.[சான்று தேவை] இப்படி மக்களுக்குப் பேரளவில் விளம்பரங்களைப் பரப்புதலும் ஒரு பொது ஊடக வடிவமேயாகும். காணொலி விளையாட்டுகளும் பொது ஊடகமாக படிமலர்ந்தவண்ணம் உள்ளது. இவை உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் மக்களுக்கு பொது விளையாட்டுப் பட்டறிவையும் உணட்வையும் ஏற்படுத்துகின்றன. இவை அனைத்துப் பயனர்களுக்கும் பொது செய்தியையும் கருத்தியலையும் வெளியிடுகிறது. இணையத்தில் விளையாடுவதால் பயனர்கள் தம் பட்டறிவை மற்ரவரோடு பகிர்ந்துக் கொள்கின்றனர். என்ராலும் இணையத்தைத் தவிர்த்துவிட்டால், கானொலி விளையாட்டாளர்கள் பொதுப் பட்டறிவைப் பகிரமுடியுமா என்பது ஐயத்துக்குரியதே. எனவே இது ஒரு பொது ஊடகமா எனும் கேள்வி மேலெழுகிறது.[சான்று தேவை] பான்மைகள்கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் தாம்ப்சன் எனும் சமூகவியலாளர் பொது ஊடகத்தின் ஐந்து பான்மைகளை இனங்கண்டுள்ளார்:[7]
பொது, முதன்மை, மாற்று ஊடகங்கள்"பொது ஊடகம்" எனும் சொல் தவறாக சிலவேளைகளில் "முதன்மை ஊடகம்" எனும் சொல்லுக்கு ஒத்த்தாகப் பயன்படுத்தப்படுகிறது. முதன்மை ஊடகம் மாற்று ஊடகத்தில் இருந்து உள்ளடக்கத்தாலும் கண்ணோட்டத்தாலும் வேறுபடுத்தப்படுகிறது. மாற்று ஊடகங்களும் பொது ஊடகங்களே. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பயனர் எண்ணிக்கையே. இதில் பயனர்களின் எண்ணிக்கை பொது ஊடக எண்ணிக்கையை விட் குறைவாக அமையும். வழக்கமான பயன்பாட்டில் பொது எனும் சொல் தகவலைப் பெறும் குறிப்பிட்ட பயனர் என்னிக்கையைக் குறிக்காமல், தகவல் கொள்கையளவில் எண்ணற்ற பெருவோருக்குப் பயன்கொள்ளும் நிலையில் அமைதலையே குறிக்கிறது.[7] பொது, வட்டார, சிறப்பு ஊடகங்கள்பொது ஊடகம், வட்டார ஊடகத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது. பொது ஊடகம் தன் பரப்பெல்லையை ஒருநாடு முழுவதுமாக்க் கொண்டிருக்க, வட்டார ஊடகம் அதைவிடக் குறைந்த பரப்பெல்லையிலேயே தகவலைப் பரப்புகிறது. பின்னது உலகச் செய்திகளுக்கு முதன்மை தராமல் வட்டாரச் செய்திகளுக்கு முதலிடம் தருகிறது. , சிறப்பு ஊடகம் எனும் மூன்றாவது ஊடகம் விளையாட்டுகள் போன்ற குறிப்பிட்ட தகவல் வகைகளுக்கு முதலிடம் தருகிறது. இந்த வரையறைகள் கல்லில் வெட்டியதுபோலா மாறாதனவல்ல. வட்டார ஊடகம் பொது ஊடகமாக மாறவும் வாய்ப்புண்டு. மாநில அல்லது வட்டாரச் செய்திகளில் ஆர்வம் காட்டும் சில வட்டார ஊடகங்கள் புலனாய்வு இதழியலில் ஈடுபட்டு பெயர்பெறலாம். அல்லது வட்டாரச் செய்திகளைவிட தேசிய அரசியலுக்கு தனயர்வம் காட்டலாம். கார்டியன், செய்தித்தாள் முன்னர் மான்செசுட்டர் கார்டியன் எனவிருந்தது; முன்பு வட்டார நாளேடாக இருந்தவிது, இப்போது தேசிய அளவில் பெயர்பெற்றதாக மாறிவிட்டது.[8] பொது ஊடக வடிவங்கள்ஒலி/ஒளி பரப்பல்![]() ஒலி/ஒளி பரப்புதலில் உள்ளடக்கத்தை வரிசையாக வைத்தல் நிகழ்ச்சித் திட்டமிடல் எனப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இத்துறையில் பல கலைச்சொற்கலை உருவாக்கியுள்ளது. அதேபோல, கொச்சை வழக்குகளையும் உருவாக்கியுள்ளது. வரலாறு![]() பண்டைய பண்பாடுகளின் நாடக நிகழ்த்தலில் இருந்தே பொது ஊடக வரலாறு கிளைத்தெழுந்தது எனலாம். நாடகம் தான் பல பயனர் ஒரேநிகழ்வில் அணிவகுத்த முதல் பொது ஊடகம் ஆகும். முன்னரே நூலக வெளியிடப்பட்டிருந்தாலும், முதல் அச்சு நூல் சீனாவில் கி.பி 868 இல் வைரச் சூத்திரம் எனும் பெயரில் வெளியாகியது. சீனாவில் முதல் அசையும் களிமண் எழுத்து கி.பி 1041 இல் கண்டுபிடிக்கப்பட்டது.என்றாலும் சீனாவில் மக்களிடையே எழுத்தறிவு வேகமாக பரவாததாலும், அச்சுத்தால் விலை மிக உயர்வாக இருந்ததாலும், மிகத் தொடக்கநிலை பொது ஊடகம் 1400 இல் ஐரோப்பாவில் தோன்றியது. இவை பேரளவில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் சில எடுத்துகாட்டுச் சான்றுகளே எஞ்சின. அவற்றிலும் 1600 க்கு முன்பு அச்சிட்ட ஆவணங்கள் கிடைக்கவே இல்லை. அச்சுத்தொழில் தோற்றுவித்த அச்சிட்ட ஊடகமே முதலில் பொது ஊடகம் எனும் சொல் தோன்ற வித்திட்டது. பொது ஊடகம் ஐரோப்பாவில் இடைக்காலத்தில் தோன்றியது. மேலும் காண்ககுறிப்புகள்
உசாத்துணைகள்
மேலும் படிக்க
பிற மொழிகளில்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia