மசாலா தோசை (Masala dosa) என்பது மிகவும் பிரபலமான தென்னிந்தியச் சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாகக் கருதப்படுகிறது.[1] இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமடைந்தது.[2] இது
தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்ததாக உள்ளது.[3] என்றாலும் இந்தியா முழுவதிலும் கிடைக்கக்கூடியது.[4] ஏன் வெளிநாடுகளிலும் கூட கிடைக்கிறது.[5][6]
மசாலா தோசை தயாரிப்பு முறை நகரத்துக்கு நகரம் இடம் மாறுபடுகிறது.[7]
தயாரிப்பு முறை
அரிசி, உளுந்து, மற்றும் வெந்தயம் ஊற வைத்து மாவாக அரைத்து தோசை மாவு தயாரிக்கப்படுகிறது. அந்த மாவை தோசைக் கல்லில் வார்த்து அது ஒரு பக்கம் வேகும் வரை காத்திருந்து வேகவைத்த முறுவலாகத் தோசை வெந்த உடன் சிறிது எலுமிச்சைச் சாறு கொத்துமல்லியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம், கடுகு மசாலாவை ஒரு கரண்டி வைத்து கமகம வாசத்துடன் பரிமாறலாம்.[8]