மச்சோயிசம்மச்சோயிசம் அல்லது மாச்சிஸ்மோ (machismo) அல்லது பொதுவாக மச்சோ (macho) என்பது அதிக ஆண்மையைக் குறிப்பிடும், எசுப்பானிய மற்றும் போர்த்துகீசிய மொழிப் பிறப்பிடம் கொண்ட, ஒரு சொல் ஆகும்.[1] ஒரு அணுகுமுறையில், மச்சோயிசம் என்பது ஒரு தனிப்பட்டவரின் வீரிய உணர்வு முதல் ஒரு தீவிர ஆண் பேரினவாதம் வரை மாறுபடுவதாகும். இது ஒரு ஆண் தனது குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு போன்றவற்றை அளிப்பதுடன் தொடர்புடையதாகிறது. 1960 மற்றும் 1970 இல் நிகழ்ந்த பெண்ணியவாத விடுதலை இயக்கங்களின் போது, இலத்தீன் அமெரிக்க பெண்ணியவாதிகளால் இச்சொற்றொடர் ஆண்களின் வன்முறை மற்றும் அடக்குமுறைகளை குறிக்கப் பயனபட்டது. இச்சொற்றொடர் குறிப்பாக கல்வியாளர் மற்றும் பெண்ணியவாதிகளால் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் நிலவும் பாலின பாகுபாடுகளை சுட்டிக்காட்டவே முதன்மையாகப் பயன்பட்டது எனலாம்.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia