மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)
மஞ்சள் குங்குமம் 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். உதயகுமார், ஸ்ரீசங்கர், ஹெலன்குமாரி, ரொசாரியோ பீரிஸ், சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, எம். வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை உட்பட மற்றும் பலர் நடித்தனர். அந்தனி ஜீவா உதவி இயக்குநராகவும், சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றினார். சில்லையூர் செல்வராஜன், இக்னேசியஸ் மொறாயஸ் ஆகியோரின் பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசையமைத்திருந்தார். ஆர். முத்துசாமி, ஏ. சுந்தரஐயர், எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர். 1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையா 1969 ஆம் ஆண்டு முதல் மேடையேற்றி வந்த “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. லீலா நாராயணனின் பரதநாட்டியமும், பரீனா லையின் நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன. வேறு தகவல்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia