மஞ்சுகோ
மஞ்சுகுவோ என்பது இப்பொழுது வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியாவின் உட்பகுதியாக உள்ள இடத்தில், ஒரு முடியாட்சியின் கீழ் அமைந்திருந்த பொம்மை மாநிலமாக ஒருகாலத்தில் இருந்தது. சீனாவின் முன்னால் குயிங் வம்சத்தின் ஆட்சியில் இப்பகுதி முழுவதும் "மஞ்சுகோ" என அழைக்கப்பட்டது. முக்டென் (Mukden) சம்பவத்தை அடுத்து 1931 ஆம் ஆண்டுவாக்கில் ஜப்பான் இப்பகுதியை கைப்பற்றி குயிங் வம்சத்தின் கடைசி மன்னர் பியு (Puyi) என்பவரை அகற்றி ஜப்பானைச் சார்ந்திருக்கும் பெயரளவு பிரதிநிதித்துவத்துடன் ஆட்சி செய்தது. 1945 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்விக்குப் பின்னர் ஜப்பானிடமிருந்து பிடுங்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்பகுதி ரஷ்யாவின் வசம் ஆனது. அதன் பின்னர் சீனாவின் வசம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.
வரலாறுபின்னணிமஞ்சூரியன் பகுதி மஞ்சு வம்சத்தால் நவீன வடகிழக்கு சீனாவுடன் பலகாலம் இணைக்கப்படாமல் இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் மஞ்சூவம்ச வீழ்ச்சிக்குப்பின் குயிங் வம்சத்தின் கைவசம் இப்பகுதி வந்தது. 18ம் நூற்றாண்டில் இருந்த மக்கள்தொகை போர்களாலும் பலகாரணங்களாலும் 19 ஆம் நூற்றாண்டுகளில் குறைந்தது. 1858ல் இரஷ்யா இரண்டாம் ஓபியம் சண்டையின் மூலம் இப்பகுதியில் கொஞ்சம் இடங்களைக் கைப்பற்றிக்கொண்டது. ஆனாலும் அதற்கு திருப்தி இல்லை. மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தது, 1890 ல் இரஷ்யா இன்னும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது. தோற்றம்1904-05 ம் ஆண்டுகளில் மஞ்சூரியப் பகுதியை தனது நேரடிபார்வையில் வைத்ததால் ஜப்பான், ரஷ்ய-ஜப்பானியா போருக்கு தயாரானது. 1906 ஆம் ஆண்டில் ஜப்பான் தென் மஞ்சூரியன் ரயில்வே முதல் போர்ட் ஆர்தர் வரை தனது நிலையை வலுப்படுத்தியது. முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்குப்பின் மஞ்சூரிய பகுதியில் தனது அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை உட்புகுத்த ரஷ்யா, ஜப்பான், சீனா இடையே பெறும் போட்டி காணப்பட்டது. 1917 ரஷியன் புரட்சியைத் தொடர்ந்து குழப்பமான சூழலில் ஜப்பான் தனது ராணுவத்தை இப்பகுதியில் தனது நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருளாதார அழுத்தத்தின் காரணமாகவும் சோவியத் இராணுவ வெற்றிகளின் காரணமாகவும் 1925 ஆம் ஆண்டு மஞ்சூரியா சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. போர் தலைவன் ஜாங் ஹிலின் (Zuolin) என்பவர் சீனாவின் ஒரு பகுதியை கைப்பற்றி அதனை ஜப்பனின் ஆதரவுடன் மஞ்சூரியா என ஒரு அரசை நிறுவிக்கொண்டார். 1928ல் ஜப்பனீன் Kwantung இராணுவம் அவரை படுகொலை செய்தது. ![]() 1931 ல் ஜப்பனீஸ் படையெடுப்பிற்குப் பின்னர் அது தனது இராணுவத்தை மஞ்சூரியப்பகுதியில் நகர்த்தி தனது நிலையை மேண்மைப்படுத்திக்கொண்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia