மட்கி நடனம்![]() மட்கி நடனம் ( Matki Dance ) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மால்வா பிராந்தியத்தில் பெரும்பாலும் நிகழ்த்தப்படும் ஒரு வகை நடனம் ஆகும். இது திருமணங்கள், பிறந்த நாள் அல்லது வேறு எந்த சிறப்பு சந்தர்ப்பங்களில் பெண்களால் தனி நடனமாக நிகழ்த்தப்படுகிறது . இந்தியில் மட்கி என்றால் ஒரு சிறிய குடம் அல்லது ஒரு சிறிய மண்பாண்டம் என்று பொருள். இந்த நடனத்தில், பெண்கள் புடவைகள் அல்லது பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட லெகங்கா என்னும் ஆடையை அணிந்து கொள்கின்றனர். தோல் வாத்தியம் நடனத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவி யாகும். மட்கி நடனம் பொதுவாக வட்ட நிலையில் நிகழ்த்தப்படுகிறது. பெண்கள் முகத்தில் முக்காடு அணிந்து கொண்டு ஒன்று அல்லது பல அடுக்குகள் கொண்ட மண் பானைகளை தங்களின் தலையில் வைத்து இதை நிகழ்த்துவார்கள்.[1]. இதில் ஆதா மற்றும் கடா நாச் என்று அழைக்கப்படும் துணை வகைகளும் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia