மணல்கேணி (புதினம்)மணல்கேணி யுவன் சந்திரசேகர் எழுதிய தமிழ் நாவல். சுயசரிதைத் தன்மை கொண்ட படைப்பு இது. 2008ல் உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. கதைகதைநாயகன் கிருஷ்ணன், அவரது மனைவி பத்மினி, அவர்களின் இரு குழந்தைகள், நண்பன் சுகவனம், வழிகாட்டியும் நண்பருமான இஸ்மாயீல், கிருஷ்ணனின் அப்பா, அம்மா, அண்ணா அண்ணிக்கள் என பல கதாபாத்திரங்கள். மற்றும் கிருஷ்ணன் வங்கி ஊழியன். இலக்கியவாதியும்கூட. பல்வேறு தனித்தனிக் கதைகளின் தொகுதியாக இந்த நாவல் உள்ளது. இது யுவன் சந்திரசேகரின் கதைசொல்லும் முறை. இக்கதைகளில் யுவன் சந்திரசேகரின் இயல்பை கொண்ட கிருஷ்ணன் சஞ்சலம் கொண்டவன். எதிர் தன்மை கொண்டவன் இஸ்மாயீல். கிருஷ்ணனின் நினைவில் அவன் அப்பா முக்கியமான இடத்தை வகிக்கிறார் இந்த நூலின் அமைப்பு என்பது நூற்றியிரு குறுங்கதைகளின் தொகுப்பு. சுய அனுபவத்தின் ஒரு துளியையே ஒரு குறுங்கதை என்று யுவன் சந்திரசேகர் முன்வைக்கிறார். இக்கதைகள் அனைத்துக்குமே ‘நினைவுகூரல்‘ என்ற அம்சம் உள்ளது. முதல் கதை அப்பாவின் மரணச்செய்தியை கேட்க நேர்ந்த தருணத்தின் சித்திரம். அது கிருஷ்ணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அவனுக்கு உலகத்தில் ஆதரவாகவும் நெருக்கமாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவரது மரணம் கிருஷ்ணனின் சின்னஞ்சிறு உலகை நிராதரவான ஒன்றாக ஆக்குகிறது. அங்கிருந்து ஆரம்பித்து கரட்டுப்பட்டிக்கு தன் அப்பா இருந்த இடத்தை காண சென்னையில் இருந்து திரும்பிவரும் கிருஷ்ணன் வரையிலான பல தனிநிகழ்ச்சிகளை தொகுத்து இந்த நாவலை அமைத்திருக்கிறார் வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia