மணிமங்கலம்

மணிமங்கலம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
601 301

மணிமங்கலம் (Manimangalam) என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்‎.

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 1974 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 8198, இதில் 4,117 பேர் ஆண்கள், 4,081 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விழுக்காடு 72.60% ஆகும். இந்த ஊரானது தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.[1]

வரலாறு

இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஊர் ஆகும். இம் மணிமங்கலம் வட மொழியில் ரத்நாக்ரஹாரா என்றும் ரத்நக் கிராமா என்றும் குறிக்கப் பெற்றுளது. இராசகேசரி வர்மனுடைய கல்வெட்டில் இவ்வூர் ’லோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களில் ’ராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் குலோத்துங்கசோழன் காலமுதல் மூன்றாம் குலோத்துங்கன் காலம் முடியப் ’பாண்டியனை இருமடி வெங்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், மூன்றம் இராசராசனுடைய 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களில் ’கிராம சிகாமணிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும் குறிக்கப் பெற்றுளது.[2] இந்த ஊரில் கி.பி. 640 இல் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் போர் நடந்தது. இப்போரானது மணிமங்கலம் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.[3]

ஊரில் உள்ள கோயில்கள்

இவ்வூரில் மூன்று திருமால் கோயில்களும், இரண்டு சிவன் திருக்கோயில்களும் உள்ளன. திருமால் கோயில்கள் இராச கோபால பெருமாள், வைகுண்டப் பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர்க்கும், சிவபெருமான் கோயில்கள் தர்மேசுவரர், கயிலாச நாதர் ஆகியோர்க்கும் உரியவை.

மேற்கோள்கள்

  1. https://villageinfo.in/tamil-nadu/kancheepuram/sriperumbudur/manimangalam.html
  2. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 77, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன்
  3. Dubreuil, p 40
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya