மதிப்புள்ள பவளம்
மதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்(Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். பவளம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதனால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. முத்து, பவளம் இரண்டுமே கடலில் இருந்து தோன்றினும் அவை நிறத்தில் மட்டுமே வேற்றுமை உண்டே அன்றி வேதியியல் பண்புகளால் அவை ஒன்றேயாகும். இவை இரண்டுமே கடல்வாழ் உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் தாதுவே ஆகும். இவ்வுயிரினத்தின் ஓடுகள் இயற்கையில் மங்கலாகவே இருக்கும். எனவே இவற்றை பட்டை தீட்டுதலின் பயனாக மிகுந்த பளபளப்பான பொருளாக மாற்ற முடியும். பவளம் பதித்த ஆபரணங்கள் பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க நாகரீகங்களில் காணமுடிகிறது.[1][2][3] இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia