மதுக்கூர் இராமலிங்கம்

மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 ஆகத்து 2022
முன்னையவர்சு. வெங்கடேசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவிக்ரமம், மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்மீனாம்பிகை
பிள்ளைகள்
  • பாரதி வசந்த்
  • தமிழ் அமுதன்
பெற்றோர்
  • மு. சந்திரன்
  • க. பாக்கியம்
முன்னாள் மாணவர்ஏ. வி. சி. கல்லூரி
பணிஎழுத்தாளர், அரசியலர்
விருதுகள்சிங்காரவேலர் விருது

மதுக்கூர் இராமலிங்கம் (Madukkur Ramalingam) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள விக்ரமம் என்ற கிராமத்தில் மு. சந்திரன் மற்றும் க. பாக்கியம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மயிலாடுதுறை ஏ. வி. சி. கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். 1983 இல் இளங்கலை படிக்கும் பொழுது "புள்ளியில்லா கோலங்கள்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.இவர் மீனாம்பிகை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி வசந்த், தமிழ் அமுதன் என இரு மகன்கள் உள்ளனர். இவர் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[2]

படைப்புகள்

  1. புள்ளியில்லா கோலங்கள் (1983)
  2. காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள் (1985)
  3. திண்ணை பேச்சு (2002)
  4. இடது பக்கம் செல்லவும் (2004)
  5. விந்தை மனிதர்கள் (2005)
  6. கையளவு கடல் (2018)
  7. தமிழகத்தில் சமூக சீர்திருத்த இயக்கம் (2019)

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிங்காரவேலர் விருது 2021 ஆம் ஆண்டுக்காக மதுக்கூர் இராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. தமுஎகச மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு. தீக்கதிர். 16 ஆகத்து 2022.{{cite book}}: CS1 maint: year (link)
  2. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு. தினமணி. 1 ஏப்ரல் 2022.{{cite book}}: CS1 maint: year (link)
  3. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya