மத்திய வக்ஃபு குழு
மத்திய வக்ஃபு குழு (Central Waqf Council), இந்தியாவின் சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1995ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தின்[2]கீழ் இயங்கும் இவ்வமைப்பு, இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. இவ்வமைப்பு இசுலாமிய சமய அமைப்புகளுக்கு, இசுலாமியர்கள் வக்ஃபாக (கொடை) வழங்கிய சொத்துக்களை பராமரித்தல் மற்றும் மேலாண்மைப் பணி செய்கிறது. வரலாறுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, 1913ஆம் ஆண்டில் வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டது.[3][4]1923ஆம் ஆண்டில் வக்ஃபுகளை ஒழுங்குபடுத்த முதன்முதலில் முஸ்லீம் வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டது.[5]1954ஆம் இயற்றப்பட்ட வக்ஃபு சட்டத்தின்படி, 1964ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் மத்திய வக்ஃபு குழு நிறுவப்பட்டது. மாநில அளவில் செயல்படும் வக்ஃபு வாரியங்களில் செயல்பாடுகள் குறித்து இந்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் குழுவாக மத்திய வகஃபு குழு செயல்பட்டது. பின்னர் இந்த சட்டம் நீக்கப்பட்டது. [6]1995ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வகஃபு சட்டத்தின் கீழ் மத்திய வக்ஃபு குழுவிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் The 2013 வக்ஃபு சட்டத் திருத்தம் செய்ததால், வக்பு வாரியங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகாரங்கள் அதிகரித்தது. மார்ச் 2025ஆம் ஆண்டில் வக்ஃபு வாரியங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 2025 வக்ஃபு திருத்தச் சட்டம், 5 ஏப்ரல் 2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.[7] மாநில வக்ஃபு வாரியங்கள்இந்திய மாநில அரசுகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஒன்றியப் பகுதிகளும் தங்களுக்கு என தனி வக்ஃபு வாரியங்கள் நிறுவிக் கொண்டுள்ளது.[8][9][10]மாநில வக்ஃபு வாரியம் மாவட்ட வக்ஃப் குழுக்கள், மண்டல வக்ஃப் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட வக்ஃப் நிறுவனங்களுக்கான குழுக்களை உருவாக்குவதன் மூலம் வக்ஃப் சொத்துக்களை மேலாண்மை, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.. வக்ஃப் வாரியங்கள் நிரந்தர வாரிசுரிமை மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கும், வைத்திருப்பதற்கும் அதிகாரத்துடன் கூடிய நிறுவனங்களாக இருக்கும். சன்னி இசுலாம் மற்றும் சியா இசுலாம் பிரிவினர்களுக்கு தனித்தனி வக்பு வாரியங்கள் உள்ளது.
தற்போது 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 31 வக்பு வாரியங்கள் உள்ளது. கோவா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மற்றும் டாமன் & தியூ ஒன்றியப் பகுதிகளில் வக்பு வாரியங்கள் கிடையாது. 1995ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. நீதிபதி சஷ்வத் குமார் குழு 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் குறித்த நிலை அறிக்கையைத் தயாரித்துள்ளார். இந்தியா முழுமைக்கும் வக்ஃப் சொத்துக்களின் மதிப்பு ரூபாய். 1.2 இலட்சம் கோடி என மதிப்பிட்டுள்ளது. மேலும் அவை ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி வருமானத்தை ஈட்டக்கூடும். ஆனால் ரூபாய். 163 கோடி மட்டுமே ஈட்டுகிறது என்றும், வக்ஃப் விவகாரங்களை நிர்வகிக்க முஸ்லிம் மூத்த அரசு அதிகாரிகளின் கடுமையான பற்றாக்குறை உள்ளது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.[11] ஊழல் மற்றும் சர்சைகள்மத்திய வக்ஃபு குழு மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஊழல், நில ஆக்கிரமிப்பு மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.[12][13] கர்நாடகா வக்பு வாரியம் 27,000 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனிநபர்களுக்கு வழங்கியதால் ரூபாய் 2 டிரில்லியன் மதிப்பிற்கு ஊழல் நடைபெற்றது.[14] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia