மத்ரித் முற்றுகை
மத்ரித் முற்றுகை (Siege of Madrid) 1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது எசுப்பானியத் தலைநகரம் மத்ரித் இரண்டரை ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது எசுப்பானியக் குடியரசுக்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த மத்ரித் சண்டையின் (Battle of Madrid) போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர். எசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான மத்ரித் லாரேட் பிளேட் (எசுப்பானியம்: Placa Laureada de Madrid) மற்றும் மத்ரித் மேன்சிறப்பு (எசுப்பானியம்: Distintivo de Madrid),[1][2] எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[3] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia