மந்திரப் புன்னகை (2010)
மந்திரப் புன்னகை (Mandhira Punnagai) திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கரு பழனியப்பன் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் கரு பழனியப்பன், மீனாட்சி, சந்தானம், ரிஷி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். 19 நவம்பர் 2010 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் வித்யாசாகர். நடிகர்கள்
கதைச்சுருக்கம்கதிர் (கரு பழனியப்பன்) மிகவும் நேர்மையான, வெளிப்படையான, திறமையான கட்டிட கலை நிபுணர். அவனுக்கு பெண் தோழிகளோ அதிக ஆண் தோழர்களோ இல்லை. ஹோண்டா நிறுவனத்திற்கு ஒரு புதிய கட்டிடம் கட்டும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நிறுவனத்தில் பணிபுரியும் நந்தினி (மீனாட்சி) கதிரை சந்திக்க நேரிடுகிறது. கதிரின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுகிறாள் நந்தினி. ஆனால் கதிர் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. நந்தினியுடன் வேலை செய்யும் ஷங்கர் (ரிஷி) நந்தினியை காதல் செய்ய, எவ்வாறு அவளை தன் வசப்படுத்திடுவது என்று கதிரிடம் உதவி கேட்கிறான். கதிர் ஷங்கரை நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனையே தன் காதலை வெளிப்படுத்த சொல்கிறான். இந்த செய்கையால் கதிர் மீது உள்ள நந்தினியின் அன்பு மேலும் அதிகமானது. நாளைடைவில், நந்தினி மேல் கதிருக்கு விருப்பம் ஏற்படுகிறது. ஆனால் அவள் தன்னை ஏமாற்றுகிறாளோ என்ற சந்தேகம் கதிருக்கு வருகிறது. காவல் நிலையத்திற்கு சென்று, தான் நந்தினி கொன்று விட்டதாக வாக்குமூலம் தருகிறான் கதிர். உடனே போலீஸ் கதிர் வீட்டிற்கு வந்து சோதனை செய்தால், நந்தினியின் பிணம் ஏதும் கிடைக்கவில்லை. கதிரின் நண்பன் மன்மத நாயுடு (தம்பி ராமையா), கதிர் முந்தைய இரவு தனக்கு தானே பேசிக்கொண்டு கோபத்தில் பொருட்களை உடைத்துக்கொண்டிருந்தான் என்று போலீஸில் சொல்கிறான். கதிரின் பாலக பருவத்தில், அவனின் தாய் தகாத உறவில் ஈடுபட்டதால் அவனின் தந்தை தற்கொலை செய்திகொண்டார். இந்த சம்பவத்தால், கதிருக்கு மனநல கோளாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. நந்தினி எவ்வாறு கதிரின் கோளாறை சரி செய்ய முயற்சி செய்தாள் என்பதே மீதி கதையாகும். இசைஇந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் ஆவார். அறிவுமதி, விவேகா மற்றும் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதினர்.
விமர்சனங்கள்பிகைண்ட்வுட்ஸ் என்னதான் கதை நன்றாக இருந்தாலும், படமாகப்பட்டவிதம் பார்வையாளர்களை ஏமாற்றுவதாகவே அமைந்தது" என விமர்சனம் செய்தது[1]. தி இந்து, "வேறு ஒரு பிரபல முகத்தை வைத்து எடுத்திருந்தால் படம் பெரிய அளவில் வந்திருக்கும் என்றும், நல்ல இயக்குநராக விளங்கிய கரு பழனியப்பன், நல்ல நடிகராக விளங்க மேலும் பயிற்சி தேவை என்றும்" விமர்சனம் செய்தது.[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் , "பழனியப்பன் நடிகராக முதல் படத்திலேயே ஒரு சவாலான வேடத்தில் நடுத்துள்ளார் என்றும், மாறுதலை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல படம் என்றும்," விமர்சனம் செய்தது.[3] ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ரணகளமான தளத்தில் காதல் என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். ஆனால், அதை மயில் இறகால் எழுதியதுதான் பிரச்னை!" என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia