மந்தீப் கவுர்
மந்தீப் கவுர் (Mandeep Kaur) என்பவர் ஓர் இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்19 அன்று பிறந்த இவர் முக்கியமாக 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்[1]. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்[2]. சிறுநீர் பரிசோதனையில் மந்தீப் கவுர் மெத்தோன் டையீனோன் மற்றும் சிடானோசொலோல் போன்ற வளர்மாற்ற ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்ததாக ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் 29 சூன் 2011 இல் ஒரு செய்தி வெளியிட்டது. தொடர்ந்து அதே நாளில் இந்திய தடகள கூட்டமைப்பும் இவர் மீதான தடை அறிவிப்பை வெளியிட்டது[3]. தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எதையும் தான் தெரிந்து உட்கொள்ளவில்லை என்றும், பயிற்சிகளின் போது தனக்கு அளிக்கப்பட்ட உணவுக் கூட்டுப் பொருட்களைச் சோதித்துப் பார்க்கும்படியும் மந்தீப் கவுர் விசாரனையின் போது வேண்டுகோள் விடுத்தார்[4] . இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மந்தீப் கவுரின் குழுவில் உடன் ஓடிய வீராங்கனைகள் அசுவினி அக்குன்யி மற்றும் சினி யோசு உட்பட மொத்தம் ஆறு வீராங்கனைகளுக்கும் ஊக்க மருந்து பரிசோதனையில் இதே முடிவு கிடைத்தது. இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அசய் மேக்கன், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் யூரி ஓக்ரோத்னிக்கை அதிரடியாக வேலை நீக்கம் செய்தார்[5] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia