மனிதக் குடியிருப்பு![]() குடியிருப்பு என்பது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மக்கள் வாழும் ஒரு சமுதாயத்தை அல்லது ஓர் இடத்தைக் குறிக்கும். பொதுவாக இது தொல்லியல், புவியியல், நிலத்தோற்றவியல் வரலாறு போன்ற துறைகளையும் உள்ளடக்கிய பல துறைகளில் பயன்படுகிறது. குடியிருப்புக்கு குறிப்பிட்ட அளவோ, மக்கள் தொகையோ அல்லது முக்கியத்துவமோ இருக்கவேண்டும் என்பது இல்லை. எனவே குடியிருப்பு என்னும்போது அது ஒரு சில வீடுகள் மட்டும் ஒன்றாக இருக்கும் ஓர் இடமாகவோ அல்லது புறநகர்ப் பகுதிகளுடன் கூடிய மிகப் பெரிய நகரமாகவோ இருக்கலாம். எனவே குடியிருப்பு என்பதில் சிற்றூர்கள், ஊர்கள், நகரங்கள், மாநகரங்கள், பெருநகரங்கள் போன்றவை எல்லாமே அடங்கும். பொதுவாகக் குடியிருப்பொன்றில் மக்கள் வாழும் வீடுகளைத் தவிர தெருக்கள், வழிபாட்டிடங்கள், குளங்கள், வேளாண் நிலங்கள், சந்தை, பூங்காக்கள், கடைகள் போன்ற பல்வேறு விடயங்களும் அமைந்திருக்கக் கூடும். குடியிருப்புகளை அவற்றின் அளவு, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலம் குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றை வரையறுக்க முடியும்.[1][2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia