மனித உரிமை அமைப்புகள் புலிகள் மக்களை கேடயங்களாப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுவன்னியில் உள்ள மக்களை மனித கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகளான பன்னாட்டு மன்னிப்பு அவை,[1] மனித உரிமைகள் கண்காணிப்பகம்,[2] யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு [3] ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. இந்த அமைப்புகள் மட்டுமல்லாது, இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா [4], ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் இவ்வாறு குற்றம் சாட்டி உள்ளன. 2008 இறுதிப் பகுதியில் சுமார் 3,00,000 வரையான மக்கள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்தார்கள். 2009 மார்ச் இறுதியில் இந்த எண்ணிக்கை 1,50,000 எனும் எண்ணிக்கைக்கும் கீழாக குறைந்தது. இந்தக் காலப் பகுதிக்குள் புலிகளின் ஆளுமைக்குள் இருந்த பெரும்பான்மை நிலப்பரப்பு இலங்கைப் படைத்துறையால் கைப்பற்றப்பட்டது. மக்கள் மேலும் மேலும் சுருங்கிய புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர். படையினர் இவ்விடங்களைக் கைப்பற்ற போர் நடவடிக்கைகளை எடுக்கின்றனர். எறிகணை வீச்சு, வானூர்தித் தாக்குதல் என நேரடியாகவும் மக்கள் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துகின்றனர். இதில் பெருந்தொகை மக்கள் கொல்லப்படுகின்றனர். மேலும், உணவு மருந்து உட்பட எல்லாவிதமான அடிப்படைப் பொருட்களும் இங்கு செல்வது படையினரால் தடுக்கப்பட்டுள்ளது, அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறக்கின்றனர். இங்கு இயங்கிய அரச சார்பற்ற பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் அனைத்து இலங்கை அரசால் தடை செய்யப்பட்தால் அவை வெளியேறின. மக்கள் அடிப்படை உணவு, நீர், உறைவிட, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், அந்த இடங்களில் இருந்து அரச கட்டுபாட்டு இடங்களுக்கு மக்கள் இடம்பெயர வழி செய்ய வில்லை என்று மேலும் குற்றம் சாட்டப்படுகிறது. இவ்வாறு இடம் பெயரும் மக்கள் முகாங்களிலும் சிறைகளிலும் அடைக்கப்படுவதும், சித்தரவதை செய்யப்படுவதும், படுகொலை செய்யப்படுவது நடைபெறுகிறது என்பது இங்கு குறிக்கத் தக்கது. விடுதலைப் புலிகள் கருத்துக்கள்தாம் மக்களை வெளியேறுவதற்கு தடுக்கவில்லை என்று புலிகள் கூறுகிறார்கள். மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேற்றல்பொது மக்களைப் போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேற்ற அனுமதிக்குமாறு இருந்தரப்பையும் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கேட்டுள்ளன. குறிப்பாக இந்தியா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. இவற்றையும் பாக்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia