மனித வறுமைச் சுட்டெண்மனித வறுமைச் சுட்டெண் என்பது ஒரு நாட்டில் காணப்படும் வாழ்க்கைத்தரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சுட்டியாகும். இது ஐக்கிய நாடுகள் சபையால் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணுக்கு நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது. 1997ல் வெளியிடப்பட்ட மனித அபிவிருத்தி அறிக்கையிலேயே இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணிலும் பார்க்க, சிறந்த முறையில் வறுமை நிலையை இதன் மூலம் அளவிடலாம் எனக் கருதப் படுகிறது.[1] 2010ல் இச்சுட்டிக்குப் பதிலாக பல்பரிமாண வறுமைச் சுட்டெண் எனும் புதிய சுட்டெண்ணை ஐக்கிய நாடுகள் அறிமுகப்படுத்தியது. மனித வறுமைச் சுட்டெண்ணின் அளவுகோல்களாக மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் பயன்படுத்தப்படும் மூன்று காரணிகளே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அவையாவன: ஆயுள் எதிர்பார்ப்பு, அறிவு மற்றும் வாழ்க்கைத்தரப் பண்பு ஆகியனவாகும். மனித வறுமைச் சுட்டெண் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்குத் தனியாகவும் (HPI-1), தெரிவுசெய்யப்பட்ட உயர்வருமானம் பெறும் நாடுகளுக்குத் தனியாகவும் (HPI-2) கணிக்கப்படுகிறது. இதன் மூலம் வறுமை நிலையில் பாரிய வித்தியாசத்தை உடைய இரு குழுக்களின் சமூக பொருளாதார மாற்றங்களை சிறப்பாகப் பிரதிபலிக்கக் கூடியதாயுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்காக (HPI-1)மனித அபிவிருத்தி அறிக்கை இணையத்தளத்தின் வரைவிலக்கணப்படி, "மனித அபிவிருத்திச் சுட்டெணை அளவிடப் பயன்படும் மூன்று அளவுகோல்களான நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு மற்றும் வாழ்க்கைத்தரப் பண்பு ஆகியவற்றினால் வறுமையை அளவிடும் ஒரு கூட்டுச் சுட்டெண்" என குறிப்பிடப்படுகிறது. இச்சுட்டெண்ணைக் கணிக்கும் சூத்திரம்:
: பிறப்பிலிருந்து 40 வயது வரையான ஆயுள் எதிர்பார்ப்பு (100ஆல் பெருக்கப்படும்) தெரிவு செய்யப்பட்ட உயர் வருமானம் பெறும் OECD நாடுகளுக்காக (HPI-2)மனித அபிவிருத்தி அறிக்கை இணையத்தளத்தின் வரைவிலக்கணப்படி, "மனித அபிவிருத்திச் சுட்டெணை அளவிடப் பயன்படும் மூன்று அளவுகோல்களான நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு மற்றும் வாழ்க்கைத்தரப் பண்பு ஆகியவற்றுடன் சமூகத் தவிர்ப்பும் கவனத்தில் கொள்ளப்படும்." இச்சுட்டெண்ணைக் கணிக்கும் சூத்திரம்:
: பிறப்பிலிருந்து 60 வயது வரையான ஆயுள் எதிர்பார்ப்பு (100 மடங்காக) 2007–2008ஆண்டுக்கான இறுதி அறிக்கைப்படி, 22 நாடுகளில் 19 நாடுகளே உயர் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைக் கொண்டுள்ளன. தரப்படுத்தல் பின்வருமாறு (தாழ்ந்த வறுமையுள்ள நாடுகள் மேலேயுள்ளன):
இந்தப் பட்டியலில் இல்லாத மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி, முதல் 22 இடங்களுக்குள் உள்ள நாடுகள் ஐஸ்லாந்து, நியூசிலாந்து, லிச்டென்ஸ்டைன் என்பனவாகும். எல்லா நாடுகளும் இங்கே உள்ளடக்கப்படுவதில்லை. ஏனெனில் எல்லா நாடுகளுக்கும் அளவுகோல்களுக்கான தரவுகள் கிடைப்பதில்லை. இதனால் இங்குள்ள நாடுகளின் நிலைகள் மாறுபடலாம். ஏனைய நாடுகளுக்கான பெறுமானங்களுக்கு கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும். பயன்படுத்தப்பட்ட சுட்டிகள்:
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia