மனித வளர்ச்சிக் கோட்பாடுமனித வளர்ச்சிக் கோட்பாடு (Human development (economics))என்பது, வாழ்சூழற் பொருளியல், பேண்தகு வளர்ச்சி, சமூகநலப் பொருளியல், பெண்ணியப் பொருளியல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட எண்ணக்கருக்களை இணைத்துக்கொண்ட ஒரு பொருளியற் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு, வாழ்சூழலியல், பொருளியல், மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலகமயமாதற் பின்னணியில் செயற்படுவதன் மூலமுமே நியாயப் படுத்தப்படுகின்றது.[1] ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது மனித மேம்பாட்டை "மக்களின் தேர்வுகளை விரிவுபடுத்தும் செயல்முறை" என வரையறுக்கிறது. இத்தகைய தேர்வுகள் மனிதர்களை "நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், கல்வி பெறவும், மரியாதைக்குரிய வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கவும்" அனுமதிப்பதுடன், "அரசியல் சுதந்திரம், பிற உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சுயமரியாதையின் பல்வேறு கூறுகளையும்" அனுபவிக்க அனுமதிக்கிறது.[2] எனவே, மனித மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சியை விட மிகவும் மேலானது, அது மக்களின் தேர்வுகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழி மட்டுமே.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia