மனுக்கா நீள்வட்ட அரங்கம்
மனுக்கா ஓவல் அல்லது மனுக்கா நீள்வட்ட அரங்கம் (Manuka Oval) ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவின் வணிக மாவட்டமான மனுக்காவை அடுத்த கிரிஃபித் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். ஆத்திரேலியக் காற்பந்தாடப் போட்டிகளின்போது புரவலர் காரணங்களுக்காக இசுடார்டிராக் ஓவல் கான்பரா என அழைக்கப்படுகின்றது.[1] இந்த அரங்கத்தின் கொள்ளளவு 13,550 பேர் ஆகும்;[2] இருப்பினும் சில நேரங்களில் இதைவிடக் கூடுதலானவர்கள் காணலாம்.[3][4] இந்த அரங்கத்தில் கோடைக்காலத்தில் துடுப்பாட்ட விளையாட்டுக்களும் குளிர்காலத்தில் ஆத்திரேலிய காற்பந்தாட்ட போட்டிகளும் ஆடப்படுகின்றன. சிறப்புக்கூறுகள்அரங்கப் பொறுப்பாளரின் இரண்டு மாடிக் குடியிருப்பு திடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 1930 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. நீள்வட்ட அரங்கைச்சுற்றிலும் சைப்பிரசு, பாப்புலசு, கருவாலி, எல்ம் மரங்கள் 1920 ஆம் ஆண்டுகளில் நடப்பட்டன.[5] இங்குள்ள புள்ளிப்பலகை, 1901 காலத்து ஜாக் பிங்கிள்டன் புள்ளிப்பலகை, மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்திலிருந்து இங்கு கொணரப்பட்டது; அங்கு 1980களில் புதிய இலத்திரனியல் புள்ளிப்பலகை நிறுவப்பட்டப்போது இவ்வாறு மாற்றப்பட்டது. இந்தப் பலகை மனுக்காவில் நிறுவப்பட்ட சமயத்தில் மரணமடைந்த ஆத்திரேலிய துவக்க ஆட்டக்காரரும் அரசியல் விமரிசகரும் எழுத்தாளருமான ஜாக் பிங்கிள்டன் நினைவாக அவ்வரது பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.[3][6] ![]()
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia