மனோகர் சிங்
மனோகர் சிங் (Manohar Singh) (12 ஏப்ரல் 1938 - 14 நவம்பர் 2002) பாலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்ற [1][2] நாடக நடிகரும், இயக்குநரும், குணசித்திர நடிகரும் ஆவார் . பார்ட்டி (1984) மற்றும் டாடி (1989) போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். நாடகத்திலிருந்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், நாடக இயக்குநராகவும், பின்னர் திரையுலகுக்கு மாறுவதற்கு முன்பு 1976 முதல் 1988 வரை தேசிய நாடகப் பள்ளியின் தலைவராகவும் இருந்தார்.[3] ஒரு நாடக நடிகராக இப்ராஹிம் அல்காசி இயக்கிய துக்ளக் என்ற நாடகத்தில் இவரது சிறந்த நடிப்பு இருந்தன. மேலும், நிசார், அமல் அல்லானா எழுதிய ஹிம்மத் மாய் மற்றும் பேகம் பார்வ் போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார். ஆண்டுதோறும் ஸ்ரீராம் பாரதிய கலா மைய தயாரிப்பான "ராம்" என்ற நாடகத்தில் குரல் கொடுக்கிறார். இவரது குரலில் வர்ணனையை பார்வையாளர்கள் கேட்க முடியும். இது கதைக்கு கட்டமைப்பையும் தொடர்ச்சியையும் வழங்குகிறது. சுயசரிதைஇமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாக்கு அருகிலுள்ள குவாரா என்ற மிகச் சிறிய கிராமத்தில் 1938இல் பிறந்த மனோகர் சிங் தனது முதல் பணியை மாநில அரசு நடத்தும் நாடகப் பிரிவில் பெற்றார். அவர் 1971 இல் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார். விரைவில் நிறுவனத்தின் நாடகங்களை இயக்கத் தொடங்கினார். 1971இல் கட் கி ஆவாஸ் என்ற நாடகத்தை இயக்கினார்.[4] நிறுவனத்தின் இரண்டாவது தலைவரானார். மேலும் 1988 வரை அப்பதவியில் இருந்தார். இவருக்கு 1982இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.[5] நீனா குப்தாவின் டார்ட் மற்றும் பால் சின் உட்பட பல வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். விருதுஇவருக்கு 1982ஆம் ஆண்டு நடிப்புக்காக (இந்தி நாடகம்) சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில், இவரது பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை தில்லியின் கலைக் கூடம் ஏற்பாடு செய்தது. இந்தக் கண்காட்சி இவரது முதல் நாடகமான தி காகசியன் சாக் சர்க்கிள் (1968) தொடங்கி, துக்ளக், கிங் லியர், ஹிம்மத் மாய், தி திரிபென்னி ஓபரா போன்ற தேசிய நாடகப் பள்ளியின் நாடகங்களில் இவரது பயணத்தை விவரித்தது.[6] இறப்புஇவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2002 நவம்பர் 14 அன்று புதுதில்லியில் இறந்தார்.[7][8] மரபு2003 ஆம் ஆண்டில், தேசிய நாடகப் பள்ளி இவரது நினைவாக மனோகர் சிங் ஸ்மிருதி புரஸ்கார் என்ற தலைப்பில் ஒரு விருதை பள்ளியின் இளம் பட்டதாரிக்கு (50 வயது வரை) வழங்கியது.[9][10] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia