மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம்மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[1] தாவரங்கள்வெப்பமண்டல அகன்ற இலைக்காடுகள் இங்கு காணப்படுகின்றன.[2] இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன. இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன. கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும். விலங்குகள்மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong)[3], ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன. அச்சுறுத்தல்கள்முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும். மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia