மயோர்க்கா
மயோர்க்கா (Majorca அல்லது Mallorca, எசுப்பானியம்: Mallorca [maˈʎorka])[2] நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும். இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது. இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்களும் மயார்க்காவுடன் நிர்வாகத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. மயோர்க்காவின் நாட்டுப்பண்ணாக லா பாலங்குரா விளங்குகிறது. மினோர்க்கா, இபிசா, போர்மென்டெரா போன்ற மற்ற பலேரிக் தீவுகளைப் போலவே இத்தீவும் விடுமுறை மனமகிழ் தலமாக விளங்குகிறது; ஜெர்மனி, அயர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, எசுக்காண்டினாவிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தீவின் பெயர் இலத்தீன் மொழியின் இன்சுலா மேஜர், "பெரியத் தீவு" என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது; பின்னர் மயோரிக்கா, "பெரியதான ஒன்று" எதிர் மற்ற சிறிய தீவான மினோர்க்கா, "சிறியதான ஒன்று". காட்சிக்கூடம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia