மரபு வழிமரபு வழி [1][2] என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[3][4] ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர். புராணம்பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் தமிழக அரச மரபுகள் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம்[5][6] எனவும் சோழர் சூரிய வம்சம்[7][8] பல்லவர் பரத்துவாசர் வம்சம்[9] எனவும் கூறப்படுகின்றனர். ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர்.[10] மாணாக்கர் பரம்பரைஇது வழிவழியாக இவருக்குப் பின்னர் இவர் மகன் என வருவது அன்று. இவருக்குப் பின்னர் இவரது மாணாக்கர் என வருவது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia