மரபு வியட்நாமியத் திருமணம்
மரபு வியட்நாமியத் திருமணம் (traditional Vietnamese wedding) வியட்நாமியப் பண்பாட்டில் மிக முதன்மை வாய்ந்த விழாவாகும். இதில் கன்பூசிய, புத்தமத கருத்தியல்களின் தாக்கம் நிறைய உண்டு. நிகுயேன் பேரரசு காலத்தில் இருந்தான மரபுத் திருமண உடைகள்![]() ![]() காலத்தையும் சூழலையும் பொறுத்து மரபு வியட்நாமியத் திருமண உடை வேறுபட்டாலும், நிகுயேன் பேரரசுக்குப் பின்னர் பெண்கள் ஆவோ தை திருமண உடையை அணியத் தொடங்கினர். இவை அரசு உடையான ஆவோ மேன் பூ எனும் அரசவை மகளிர் அணிந்த உடையைப் போல வடிவமைக்கப்பட்டதாகும் . நிகுயேன் பேரரசுப் பாணித் திருமண உடை இன்று மக்களிடையே பெரிதும் விரும்பி மணக்கோலத்தில் அணியப்படுகிறது. ஆவோ மேன் பூவும் ஆவோ தையும் விரிவான வடிவமைப்புநுட்பத்தில் வேறுபடுகின்றன. ஆவோ மேன் பூவில் பேர்ரசு குறிய்யிடுகள் பின்னல்வேலைப்பாட்டல் அழகுபடுத்தப் பட்டிருக்கும். மேலும் இதில் ஆடம்பரமான மேலுறையாடைகள் அமைந்திருக்கும். கவுன் சிவப்பிலோ இளஞ்சிவப்பிலோ அமையும். வழக்கமாக மணமகள் கான் தோங் தலையணியை அணிவார். மணமகன் எளிய ஆடவர் அணியும் நீல நிற ஆவோ தை போன்ற உடையை அணிவார்.
உறுதிப்படுத்தல்திருமணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உறுதிப்பாடு செய்தல் நடக்கும். கடந்த காலத்தில் குடும்ப ஏற்பாட்டுத் திருமணங்கள் மணமக்களின் பெற்றோராலோ அவர்களது சுற்றத்தாராலோ உறுதிபடுத்தப்பட்டது. இதில் மனமக்களோடு கலந்துகொள்வது உண்டு என்றாலும் இறுதி முடிவைப் பெற்றோரே எடுப்பர். உறுதிப்பாட்டு நாளன்று தான் பெரும்பாலும் மணமகளும் மணமகனும் முதன்முதலாகச் சந்திப்பர். என்றாலும், கடந்த சில பத்தாண்டுகளாக, வியட்நாமியர் காதல் மணம் புரிவது நிகழ்கிறது. திருமணம்மேலும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia