மரிகாட், செயின்ட் மார்ட்டின்
![]() மரிகாட் (Marigot) என்பது கரிபியன் அல்லது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள செயிண்ட் மார்டின் தீவின் பிரெஞ்சுப் பகுதியில் இருக்கும் முக்கிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். மக்கள் தொகை2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 5700 நபர்கள் குடியிருந்தனர். புவியியல்மரிகாட் தீவு, செயிண்ட் மார்ட்டின் தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. மரிகாட் விரிகுடா மற்றும் தீவின் கிழக்கிலுள்ள உட்புற மலைகள் வழியாக மேற்கு கடற்கரையில் இருந்து மரிகாட் தீவு பரவியுள்ளது. தென் மேற்குப் பகுதியில் இத்தீவு சிம்ப்சன் விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. காலநிலைகுறிப்பாக இப்பகுதியில் உலர் காலநிலை நிலவுகிறது. கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி மரிகாட் வெப்பமண்டலப் புல்வெளி காலநிலையை கொண்டிருக்கிறது. காலநிலை வரைபடங்களில் இவ்வகை காலநிலையை சுருக்கமாக "Aw" எனக் குறிப்பிடுவர்.[1]
போக்குவரத்துஇந்நகரில் இளவரசி யூலியானா அனைத்துலக விமான நிலையம் மற்றும் எல் எசுபெரன்சு விமான நிலையம் போன்ற விமான சேவையும் அங்கியுலா தீவின் புளோயிங் பாயிண்ட் கிராமத்திற்கு ஒரு படகுத்துறை சேவையும் இருக்கிறது. வரலாறுமுதலில் சதுப்பு நிலத்தில் இருந்த ஒரு மீன்பிடி கிராமத்திற்காகப் பெயரிடப்பட்டது. அரசர் பதினாறாம் இலூயி ஆட்சிக் காலத்தில் மரிகாட் தலைநகரமாக மாற்றப்பட்டது. இவ்வரசரே மரிகாட் விரிகுடாவிற்கு அருகிலுள்ள மலையில் செயிண்ட் இலூயிசு கோட்டையைக் கட்டினார். இன்று, அந்த கட்டிடம் மரிகாட்டின் மிக முக்கியமான கட்டிடமாகத் திகழ்கிறது. கரிபியன் நகரங்களில், குறிப்பாக இஞ்சிரொட்டி மாதிரி வீடுகள் மற்றும் நடைபாதை உணவகங்களுக்கு மரிகாட் புகழ்பெற்ற நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை காலைகளில் இங்கு சந்தை கூடுகிறது. 1998 ஆம் ஆண்டு சிபிடூ 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia