மரிஜா ஜிம்புடாஸ்
மரிஜா ஜிம்புடாஸ் (லிதுவேனியர்:Marija Gimbutienė; ஜனவரி 23, 1921 - பிப்ரவரி 2, 1994) ஒரு "லிதுவேனிய-அமெரிக்க தொல்பொருள் அறிவியலாளர்" மற்றும் மானிடவியலாளர் ஆவார். முந்தைய இந்தோ-ஐரோப்பியத் தாயகத்தின் பாண்டிக் ஸ்டெப்பி புல்வெளிப் பிரதேசங்களில், இவரது புதிய கற்கால, வெண்கலக்கால, பழைய ஐரோப்பியக் கலாச்சாரங்கள் மற்றும் குர்கன் கருதுகோள் பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றால் அறியப்பட்டார். சுயசரிதைமத்திய லிதுவேனியா குடியரசின் தலைநகரான வில்னியஸ் எனுமிடத்தில் மரிஜா பிருட்டே அல்சிகாயிட் பிறந்தார். தந்தை வெரோனிகா ஜனுலாயிடைடே-அல்சீக்கேன், தாயார் டானியெலியூஸ் அல்சீகா ஆகியோர் ஆவர். அவரது பெற்றோர்கள் லித்துவேனிய அறிவாளர்கள் அவையின் உறுப்பினர்கள் ஆவார்கள்.[1] அவரது தாயார் 1908 ஆம் ஆண்டிலேயே பெர்லினின் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், லித்துவேனியாவின் முதல் பெண் மருத்துவரும் ஆவார் அதே நேரத்தில் அவரது தந்தை 1910 ஆம் ஆண்டில் தார்ட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, மரிஜாவின் பெற்றோர் தலைநகரில் முதல் லிதுவேனியன் மருத்துவமனையை நிறுவினர்.[1] இந்த காலகட்டத்தில், அவரின் தந்தையும் வில்னியஸ் சோடிஸ் என்ற செய்தித்தாளையும் கலாச்சார இதழான வில்னியஸ் ஸ்வீசா என்ற இதழையும் வெளியிட்டு வந்தார். போலிஸ் லிதுவேனியப் போரின் போது லிதுவேனிய சுதந்திரத்தின் வெளிப்படையானஆதரவாளராகவும் இருந்தார்.[2] மரிஜாவின் பெற்றோர்கள் பாரம்பரிய லிதுவேனிய நாட்டுப்புற கலைஞர்களாக இருந்தனர், அடிக்கடி இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கப்பட்டனர், இதில் வைடுனாஸ் , ஜுஜாஸ் டூமாஸ்-வைசகண்டாஸ் , மற்றும் ஜோனஸ் பசனாவாசியஸ் ஆகியோர் அடங்குவர்.[2] இவ்வாறு வலுவான கலாச்சாரப் பின்னணியுடன் வளர்ந்ததாக மரிஜா குறிப்பிடுகிறார.
1931 ஆம் ஆண்டில், லிபியாவின் தற்காலிக தலைநகரமான கவுனஸில் தனது பெற்றோருடன் மரிஜா குடியேறினார், அங்கு அவர் படிப்பை தொடர்ந்தார். அவரது பெற்றோர்கள் பிரிந்த பிறகு, அவரது தாய் மற்றும் சகோதரர் வைட்டோவாஸுடன் கவுனாஸ் என்ற இடத்தில் வாழ்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், அவரது தந்தை திடீரென்று இறந்தார். தனது தந்தையின் மரணத்தில், தான் ஒரு அறிஞராகப் படித்து உயர்வதாக உறுதியளித்தார்: " நான் என்னவாக இருக்க வேண்டும் திடீரென்று நான் நினைத்தேன், என் வாழ்க்கையில் நான் என்னவாகவேண்டும் என நினைத்தேனோ, அதைச் செய்தேன். பனிச்சறுக்கு, மிதிவண்டி சவாரி, நீச்சல் ஆகியவற்றிற்கான விளையாட்டுகளில் நான் மிகவும் பொறுப்பற்றவளாக இருந்தேன். பின் நான் முற்றிலும் மாறினேன், படிக்கத் தொடங்கினேன்." [2][3] என்று அவர் இதனைக் குறிப்பிடுகிறார். 1941 இல், அவர் கட்டிடக் கலைஞரான ஜூர்கிஸ் ஜிம்புடாஸ் என்பவரை மணந்தார். இரண்டாம் உலகப் போரின்போது , 1940-41 மற்றும் 1941-43 ஆகிய ஆண்டுகளில் சோவியத் மற்றும் ஜெர்மனிய ஆக்கிரமிப்புகளின் கீழ் மரிஜா ஜிம்புடாஸ் வாழ்ந்தார்.[4] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia