மரியம் சகாரியா
மரியம் சகாரியா (Maryam Zakaria) சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுவீடிஷ் - ஈரானிய நடிகை. தற்பொழுது பாலிவுட் மற்றும் அவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1][2] இவர் பாலிவுட் படங்களான "ஏஜெண்ட் வினோத்" (2012), மற்றும் "கிராண்ட் மஸ்தி"யில் நடித்ததின் மூலம் அறியப்படுகிறார். தொழில் வாழ்க்கைசகாரியா, சுவீடனில் விளம்பர நடிகை, நடன ஆசிரியர் மற்றும் நடன இயக்குநராக பணிபுரிந்தார். பிறகு "இன்டிஸ்க் டான்ஸ் ஸ்டூடியோ" என்கிற பாலிவுட் நடனப் பள்ளியை நிறுவினார். இதில் பாலிவுட் படங்களுக்கான அனைத்து விதமான நடனங்களும் கற்பிக்கப்பட்டன..[3] 2009இல் மும்பை வந்து பாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.[3][4] இவர் இம்ரான் கானுடன் 'கொக்க-கோலா' விளம்பரத்தில் நடித்துள்ளார். தமிழ் பட இயக்குநர் சுந்தர் சி., இவரது நடன காணொளியை யூடியூப்பில் பார்த்து "நகரம்" (2010) திரைப்படத்துக்கான குத்தாட்டப் பாடல் காட்சிகளுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.[5][6] இவர் பங்குபெற்று, 2011இல் வெளிவந்த "100%லவ்" என்கிற படத்தில் "டியாலோ டியாலா" பாடல் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.[7] அதைத் தொடர்ந்து அல்லரி நரேஷ்[3] உடன் இணைந்து நடித்த "மததா கஜா" மற்றும் "அர்ஜுனா" படத்திலும் நடித்துள்ளார். பின்னர் "டில்லி கி பில்லி" மற்றும் "சடா அடா" போன்ற படங்களில் நடித்துள்ளார்.[8] சாயிப் அலி கானின் "ஏஜெண்ட் வினோத்" படத்தில் கரீனா கபூர் உடன் இவர் நடித்த "தில் மேரா" எனத் தொடங்கும் பாடல் இவருக்கு பாலிவுட்டில் புகழைத் தந்தது. 2013இல் வெளிவந்த இந்திரகுமாரின் படமான "கிராண்ட் மஸ்தி"யில் இவர் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்தியாவில் அதிக வருவாயை பெற்றுத் தந்த படமாகும் , திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia