மரியம் மசூதி
மரியம் மசூதி (Mosque Maryam ) அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகாகோ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும்.இந்த மசூதி இஸ்லாம் தேசம் எனும் அமைப்பின் தலைமையகமாக உள்ளது.[1] இந்த சர்ச் 1972 ல் முதலில் கிரீக் சர்ச்சாக இருந்தது.இது எலிஜா முகமதுவால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 1988 ல் அவரிடமிருந்து லூயிஸ் பர்கான் என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[2] அமைப்புமரியம் மசூதி தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை வடிவமைப்பு கொண்டது.கட்டிடத்தின் மேற்பகுதியில் மினார் கோபுரங்கள் இல்லை.தங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.குவிமாடம் மையத்தில் "இறைவன் மிகப் பெரியவன் " என்று அரபு மொழியில் எழுதி உள்ளது. மரியம் மசூதி அருகில் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய முகமது பல்கலைக்கழகம் உள்ளது. இதனையும் காண்க
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia