மலேசியப் பொதுத் தேர்தல், 2008 (ஆங்கிலம்2008 Malaysian General Election; மலாய்: Pilihan Raya Umum Malaysia 2008; சீனம்: 2008年马来西亚大选); என்பது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தல் 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது.
மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[1][2]
நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக, சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப் பட்டது.[3]
முடிவுகள்
[உரை] – [தொகு] மலேசியப் பொதுத்தேர்தல் முடிவுகள் 2008[4]