மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கூட்டாட்சிப் பகுதி (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: Federal Territories) என்பது மலேசியாவின் கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் பகுதிகளை மலேசியக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக ஆளப்படும் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பிடுவதாகும். கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும்; புத்ராஜாயா நிர்வாக தலைநகராகும்; லபுவான் கடல் கடந்த பன்னாட்டு நிதி மையமாகவும் செயல்படுகின்றன..கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி; புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதி; ஆகிய இரு கூட்டாட்சிப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ளன; லபுவான் கூட்டாட்சிப் பகுதி, சபா மாநிலத்தில் உள்ள ஒரு தீவாகும். நிர்வாகங்கள்கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் ஆகிய அந்த மூன்று கூட்டரசுப் பகுதிகளும் மலேசியக் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் (Ministry for the Federal Territories) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளாகும்.[1] 1979-ஆம் ஆண்டில் முதலில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் நிறுவப்பட்டது அந்த அமைச்சு, கோலாலம்பூர்; கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தது. கூட்டரசுப் பிரதேச அமைச்சகம்1981-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கின் திட்டமிடல் பிரிவாகச் செயல்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது பின்னர் 2004-ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் ஒரு முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அந்தப் புதிய அமைச்சகம், மூன்று கூட்டரசுப் பகுதிகளான கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.[2] வரலாறுகூட்டாட்சி பிரதேசங்கள் முதலில் சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்தன. கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இரண்டும் சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தன, அதே சமயம் லாபுவான் சபாவின் ஒரு பகுதியாக இருந்தது.[3] தொடக்கக் காலத்தில் கோலாலம்பூர் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. 1948-ஆம் ஆண்டில், மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) தேசியத் தலைநகரமாக மாறியது. பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமை1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அதில் இருந்து, கோலாலம்பூர் நகரமும் சிலாங்கூர் மாநிலமும் பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமையில் இருந்தது. 1969-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர் நகரத் தொகுதிககளில் சிலவற்றை பாரிசான் நேசனல் கட்சி இழந்தது. இருப்பினும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே தேர்தல் கோலாலம்பூரில் பெரும் இனக் கலவரத்தையும் ஏற்படுத்தியது. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia