மலேசிய அருங்காட்சியகம்
மலேசிய அருங்காட்சியகம் அல்லது மலேசிய தேசிய அருங்காட்சியகம் ஆங்கிலம்: National Museum of Malaysia; மலாய்: Muzium Negara Malaysia; ஜாவி: موزيوم نڬارا) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இது பெர்தானா தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ளது. இங்கு மலேசிய வரலாறு, பண்பாடு குறித்து அறியலாம். மினாங்கபாவு கட்டிடவியலின் ரூமா கடாங் பாணியில் கட்டப்பட்டுள்ள அரண்மனை போன்ற கட்டிடம் ஆகும்.[1] பொதுஇதன் முகப்பு மலாய் மற்றும் தற்காலக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த தேசிய அருங்காட்சியகம் ஆகத்து 31, 1963-இல் திறக்கப்பட்டது. தேசிய அருங்காட்சியகம் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது; 109.7 மீட்டர்கள் நீளமும் 15.1 மீட்டர்கள் அகலமும் நடுப்பகுதியில் 37.6 மீட்டர்கள் உயரமும் கொண்டுள்ளது. பண்பாட்டுக் கூறுகள்அருங்காட்சியகத்தில் நான்கு முதன்மை காட்சியகங்கள் இன ஒப்பாய்வியலுக்கும் இயற்கை வரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பண்பாட்டுக் கூறுகளான திருமணங்கள், விழாக்கள், உடைகள் அரங்கக் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. வழமையான ஆயுதங்கள், இசைக்கருவிகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia