மலேசிய உச்சநீதிமன்றம்
மலேசிய உச்சநீதிமன்றம் (மலாய்:Mahkamah Rayuan Malaysia; ஆங்கிலம்:Federal Court of Malaysia; சீனம்:马来西亚联邦法院) என்பது மலேசியாவின் உச்ச நீதிமன்றம் எனும் கூட்டரசு உச்ச நீதிமன்றம்; மற்றும் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஆகும். இது புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் (Palace of Justice) உள்ளது. மலேசியாவில் இந்த உச்ச நீதிமன்றத்தை மலேசிய உச்சநீதிமன்றம் என அழைப்பது. வழக்கம். 1957-ஆம் ஆண்டு மலாயாவின் விடுதலையின் போது நிறுவப்பட்ட இந்த நீதிமன்றம், அதன் தற்போதைய பெயரை 1994-ஆம் ஆண்டில் பெற்றது. 1985-ஆம் ஆண்டுக்கு முன்னர், மலேசிய உச்ச நீதிமன்றம் என்பது மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம் மட்டுமே, மலேசியாவின் முதன்மை உச்ச நீதிமன்றமாக இருந்தது. வரலாறுமலாயாவில் முதல் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட போது, அதன் பெயர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு, சிங்கப்பூர், மலாக்கா நீதித்துறை நீதிமன்றம் (Court of Judicature of Prince of Wales' Island (now Penang), Singapore and Malacca) ஆகும். இது 27 நவம்பர் 1826-இல், இலண்டன் பிரித்தானிய முடியாட்சி அரசினால் வெளியிடப்பட்ட நீதிக்கான இரண்டாவது சாசனத்தால் நிறுவப்பட்டது. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என்பது தற்போது பினாங்கு என அழைக்கப்படுகிறது.[1] அந்த நீதிமன்றத்திற்கு நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் தலைமை தாங்கினார். அவருக்கு உதவியாக நீரிணை குடியேற்றங்களின் வழக்கறிஞர்; மற்றும் ஒரு நீதிபதி; துணையாக இருந்தனர்.[2] 1855 ஆகஸ்டு 12-இல் இலண்டன் பிரித்தானிய முடியாட்சியின் மூன்றாவது நீதி சாசனம், மலாயாவின் உச்ச நீதிமன்ற அமைப்பை மறுசீரமைத்தது. மூன்றாவது நீதி சாசனம், நீரிணை குடியேற்றங்களுக்கு மேலும் இரண்டு நீதிபதிகளை வழங்கியது. ஒரு நீதிபதி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கும்; மற்றொரு நீதிபதி சிங்கப்பூர், மலாக்காவுக்கும் வழங்கப்பட்டனர். சப்பானிய நீதிமன்றங்கள்பின்னர், 1 ஏப்ரல் 1867 முதல் நீரிணை குடியேற்றங்கள், பிரித்தானிய முடியாட்சி காலனிகளாக மாறின.[3] அதன் பின்னர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு, சிங்கப்பூர், மலாக்கா நீதித்துறை நீதிமன்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நீரிணை குடியேற்றங்களின் உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டது.[4] நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் மற்றும் மலாய் மாநிலங்களின் அறிவுரைஞர்களும் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பதில் இருந்து தவிர்க்கப்பட்டனர்.[5][6] சிங்கப்பூரின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (1942-1945), பிரித்தானியர்களின் கீழ் இயங்கிய அனைத்து நீதிமன்றங்களும் சப்பானிய இராணுவ நிர்வாகத்தால் நிறுவப்பட்ட புதிய நீதிமன்றங்களால் மாற்றப்பட்டன. அந்த நீதிமன்றங்கள் சியோனன் கோட்டோ-ஓயின் (Syonan Koto-Hoin) என அழைக்கப்பட்டன. அவை 29 மே 1942-இல் உருவாக்கப்பட்டன. அந்தக் கட்டத்தில் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் சப்பானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் இருந்தது. ஆனால், சப்பானியர்கள் மலாயாவையும் சிங்கப்பூரையும் ஆட்சி செய்த காலத்தில் ஒருபோதும் கூட்டப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்இரண்டாம் உலகப் போர்முடிவடைந்ததைத் தொடர்ந்து, போருக்கு முன்பு இருந்த நீதிமன்றங்கள் மீட்டு எடுக்கப்பட்டன. நீதித்துறையில் எந்த மாற்றமும் ஏற்படல்லை. பின்னர் 1946-இல் நீரிணை குடியேற்றங்கள் கலைக்கப்பட்டன. சிங்கப்பூர் ஒரு முடியாட்சி காலனியாக மாறியது.[7] நீரிணை குடியேற்றங்களின் உச்ச நீதிமன்றம் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் என்று அறியப்பட்டது.[8] பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலங்களில் இருந்த நீதிமன்றங்கள் மற்ற மலாய் மாநிலங்களுடன் ஒன்றிணைந்து மலாயா கூட்டமைப்பின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court of the Federation of Malaya) உருவாக்கின. இந்த உச்ச நீதிமன்ற அமைப்பு 1957-இல் மலாயா விடுதலைக்க்குப் பிறகு 1963-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. மலாயா, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை 1963-இல் மலேசியாவை உருவாக்கியபோது, இந்த உச்ச நீதிமன்ற அமைப்பு மலேசிய உச்ச நீதிமன்றம் (Federal Court of Malaysia) என்று மறுபெயரிடப்பட்டது.[9] சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்1965-இல் சிங்கப்பூர், மலேசியா கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. சிங்கப்பூர் ஒரு குடியரசு நாடாக மாறியது. இருப்பினும், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 1969-ஆம் ஆண்டு வரையில் மலேசிய உச்ச நீதிமன்றக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் சிங்கப்பூர் அதன் சொந்த நீதித்துறை அமைப்பை முறைப்படுத்த, தனி ஒரு உச்ச நீதிமன்ற நீதித்துறைச் சட்டத்தை இயற்றியது.[10] 1985-ஆம் ஆண்டுக்கு முன், மலேசிய உச்ச நீதிமன்றம் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம், முதன்மை உயர் உச்ச நீதிமன்றமாக இருந்தது.[11] சனவரி 1, 1978 அன்று, குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் தொடர்பாக, இங்கிலாந்தில் இருந்த பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வது, மலேசியாவில் தடை செய்யப்பட்டன. [11] பின்னர் 1 சனவரி 1985-இல், சிவில் வழக்குகள் தொடர்பாக பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வதும் தடை செய்யப்பட்டன. பிரிவி உச்ச நீதிமன்ற முறையீடுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அத்தகைய முறையீடுகளை ஏற்றுக் கொண்டது. இறுதியாக, 24 ஜூன் 1994-இல், மலேசிய உச்ச நீதிமன்றம் என்று மறுபெயரிடப்பட்டது. தற்போதைய மலேசிய உச்சமன்ற நீதிபதிகள்மலேசிய உச்ச நீதிமன்றத்தில் மலேசியத் தலைமை நீதிபதி; மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்; மலாயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்; சபா சரவாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்; மேலும் 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். மலேசியத் தலைமை நீதிபதி மலேசியாவின் நீதித்துறையின் தலைவராகவும் உள்ளார். அனைத்து நீதிபதிகளும் மலேசியப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் யாங் டி-பெர்டுவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து நீதிபதிகளும் அவர்களின் வயது 66 ஆண்டு 6 மாதங்கள் ஆனதும் கட்டாயமாக ஓய்வு பெறுகின்றனர். மலேசிய உச்சமன்ற நீதிபதிகள் பின்வருமாறு:[12]
அமைவிடம்கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவின் மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் மலேசிய உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. இது முன்பு கோலாலம்பூரில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் இருந்தது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia