மலேசிய நேரம்மலேசிய நேரம் அல்லது மலேசிய சீர் நேரம் (ஆங்கிலம்: Malaysia Standard Time (MST)), (மலாய்: Waktu Piawai Malaysia (WPM)) என்பது மலேசியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்: Greenwich Mean Time (GMT)) +07:30 மணி நேரம் முன்னதாக அமைகின்றது. கோலாலம்பூரில் முன்பு உள்நாட்டு நேரமாக GMT+06:46:48 என இருந்தது. 1880ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் சிங்கப்பூரின் GMT+06:55:24 உள்நாட்டு நேரம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், 1963 செப்டம்பர் 16ஆம் தேதி வரையில், பிரித்தானிய மலாயா சீர் நேரம் (ஆங்கிலம்: British Malayan Standard Time) என்று அழைக்கப்பட்டது. அந்தப் பிரித்தானிய மலாயா சீர் நேரம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு +07:30 முன்னதாக அமைந்து இருந்தது. 1981 டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 11.30க்கு (2330 hrs local time), தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள் மட்டும், தங்களின் கடிகார நேரத்தை 12.00க்கு (00:00 hrs local time) முன்னதாக வைத்து சரி செய்து கொண்டார்கள். கிழக்கு மலேசியாவில் அமலில் இருந்த UTC+08:00 உள்நாட்டு நேர வலயத்திற்கு சரி சமமாக மலேசியா முழுவதும் நேரம் சரி செய்யப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை வருவதற்கு முன்னர், இந்தியாவிற்கும் மேற்கு மலேசியாவிற்கும் நேர இடைவெளி 2 மணி நேரமாக இருந்தது. 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 2 1/2 மணி நேரமாக மாறியது. வரலாறு1981 டிசம்பர் 31ஆம் தேதி, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள், தங்களின் கடிகார நேரத்தை 30 நிமிடங்கள் முன்னதாக வைத்து சரி செய்ய வெண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொண்டது. மலேசியாவில் 80 விழுக்காட்டு மக்கள் மேற்கு மலேசியாவில் வாழ்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அந்தப் புதிய அறிவிப்பை வழக்கத்திற்கு மாறானதாகப் பலர் கருதினர். இருப்பினும், 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்களுக்கு கூட்டி வைக்கப்பட்டது. மேற்கு மலேசியாவில் 1982 ஜனவரி 1 நாள் காலை மணி 6.00 என்பது 6.30 என அதிகாரப்பூர்வமாக மாற்றம் கண்டது. தீபகற்ப மலேசியா நேரம்
கிழக்கு மலேசியா நேரம்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia