மலேர்கோட்லா மாவட்டம்
மலேர்கோட்லா மாவட்டம் ( Malerkotla district), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் மலேர்கோட்லா ஆகும். சங்கரூர் மாவட்டத்தின் மலேர்கோட்லா, அமர்கர் மற்றும் அகமதுகர் ஆகிய வருவாய் வட்டங்களைக் கொண்டு மலேர்கோட்லா மாவட்டம் புதிய 23வது மாவட்டமாக 2 சூன் 2021 அன்று நிறுவப்பட்டது.[1] மாவட்ட நிர்வாகம்684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் மலேர்கோட்லா வருவாய் வட்டம், அமர்கர் வருவாய் வட்டம் மற்றும் அகமதுகர் வருவாய் எனு மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் மலேர்கோட்லா அகமதுநகர் நகராட்சிகளையும் மற்றும் அமர்கர் பேரூராட்சிகளையும், 3 ஊராட்சி ஒன்றியங்களையும், 175 கிராம ஊராட்சிகளையும், 192 கிராமங்களையும் கொண்டுள்ளது.[2] மக்கள் தொகை பரம்பல்2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மலேர்கோட்லா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,29,754 ஆகும்.[3] இதன் 40.50% மக்கள் தொகை நகரபுறங்களில் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும்; பட்டியல் பழங்குடிகள்]] இதன் மக்கள் தொகையில் 93,047 (21.65%) ஆகவுள்ளனர்.[4] இம்ம்மாவட்டத்தில் சீக்கியர்கள் 50.89%, முஸ்லீம்கள் 33.26%, இந்துக்கள் 15.19% மற்றும் பிறர் 0.66% உள்ளனர்.[1][5] பஞ்சாபி மொழி பேசுபவர்கள் 96.69% உருது பேசுபவர்கள் 3.21% மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.10% ஆக உள்ளனர். அரசியல்இம்மாவட்டத்தின் அமர்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக, ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia