மலை ஆடு
மலை ஆடு (mountain goat) (Oreamnos americanus) வெள்ளாடின் ஒரு வகையினமாகும். இம்மலை ஆடுகள் மிக உயரமான, செங்குத்தான மலைப் பாறைகளில் எளிதாக ஏறி புற்களை மேயும் வலிமை உடையது. இம்மலை ஆடுகள் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. இம்மலை ஆடுகள் செங்குத்தான மலைப் பாறைகளில் தங்கி புற்களை மேய்வதால், வேட்டைக்காரர்களால் இவ்வாடுகளை எளிதாக வேட்டையாட முடியாது. மலைகளில் தனியாக புற்களையும், இலைகளையும் மேயும் இம்மலை ஆடுகள், இனப்பெருக்கத்திற்காக மட்டும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில், ஆண் மலை ஆடுகள், பெண் மலை ஆடுகளை தேடி வருகிறது. கழுத்திற்கு கீழ் இதன் உயரம் 3 முதல் 4 அடி வரை கொண்டது. மலை ஆடுகளின் தடிமனான தோலும், அடர்த்தியான முடிகளும் பனிப்புயல் மற்றும் கடும் குளிரிலிருந்து காக்கிறது. இதன் கால்கள் குட்டையாக இருப்பினும், உறுதி கொண்டது. இதன் கால்கள் கறுப்பு நிற குளம்புகள் கொண்டது. இதன் மெல்லிய கொம்புகள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டது. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் காணப்படும் இம்மலை ஆடுகள் வட அமெரிக்காவின் அலாஸ்கா,வாசிங்டன், கொலராடோ, அல்பர்ட்டா, பிரிட்டிசு கொலம்பியா, தெற்கு டகோட்டா, ஐடஹோ, மொன்ட்டானா போன்ற மேற்கு மலை மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்டது. [1] தோற்றமும் பண்புகளும்கிடா, பெட்டை ஆகிய இரண்டும் தாடி, குட்டையான வால், நீண்ட கருத்த கொம்புகளைக் கொண்டுள்ளன. கொம்புகள் 15-28 செ.மீ நீளம் வரை வளரும். இவை 45 முதல் 140 கிலோ எடை வரை வளரும். எனினும் பொதுவாக கிடாக்கள் 82 கிலோவுக்கு குறைவான எடையையே கொண்டுள்ளன. மேற்கோள்கள்Raedeke, Kenneth J. "Mountain goat." World Book Advanced. World Book, 2012.Web. 20 Dec. 2012. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia