மழை மறைவு பிரதேசம்

மழை மறைவு பிரதேதிற்கான காரணம் காட்டும் வரைபடம்

மழை மறைவு பிரதேசம் (rain shadow) என்பது பருவக் காற்றால் அடித்து வரப்படும் மழை மேகங்களை உயர்ந்த, நீண்ட மலைத்தொடர்கள் மறைத்து தடுத்து நிற்பதால், மலைகளுக்குப் பின்புறமுள்ள பிரதேசங்களுக்கு மழை மேகங்கள் செல்ல வழியின்றி போதுமான மழைப் பொழிவு பெறுவதில்லை. எனவே அப்பிரதேசங்களை மழை மறைவு பிரதேசங்கள் என அழைப்பர்.[1][2]

எடுத்துக்காட்டுகள்

இந்தியத் துணை கண்டத்தில்

இமயமலைத் தொடர்களால் மழை மேகங்கள் தடுக்கப்படுவதால், காற்றுப்படா மலைப்பரப்பான திபெத் மழை மறைவுப் பிரதேசமாகிறது.

பருவக் காற்றால் அடித்து வரப்படும் மழை மேகங்களை திபெத் பகுதிக்கு செல்ல விடாமல் நீண்டு, படர்ந்த இமயமலைத் தொடர்கள் தடுத்து நிறுத்தி விடுவதால், திபெத் மழை மறைவு பிரதேசமாகி, தேவையான மழைப் பொழிவின்றி வறண்ட நிலமாக காட்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில்

மழை மேகங்களை அகத்தியர் மலை தடுப்பதால், திருநெல்வேலி மழை மறைவு பிரதேசமாக உள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று காலத்தில், அரபுக்கடலிருந்து கிளம்பும் மழை மேகங்களை, மேற்கு தொடர்ச்சி மலைகள் தடுத்து நிறுத்தி விடுவதால், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், மதுரை மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் போன்ற பகுதிகளில் போதுமான தென்மேற்கு பருவ மழை பெற இயலாது, மழை மறைவு பிரதேசங்களாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya