மவுண்டன் வியூ, கலிபோர்னியா
மவுண்டன் வியூ (Mountain View) city in ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்ட்டா கிளாரா கவுன்ட்டியில் அமைந்துள்ள நகரமாகும். இது சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து சான்ட்டா குரூசு மலைகள் தென்படுவதால் இந்நகருக்கு இப்பெயர் அமைந்தது.[3] இந்த நகரத்தின் எல்லைகளாக பாலோ ஆல்ட்டோ, லோசு ஆல்டோசு, சன்னிவேல் நகரங்கள் அமைந்துள்ளன. மோஃபெட் கூட்டாட்சி வான்தளமும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவும் மற்ற எல்லைகளாக உள்ளன. 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 74,066 பேர் குடியுள்ளனர். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மவுண்டன் வியூ நகரில் பல உயர் தொழினுட்ப நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்குதான் 1956இல் திரிதடையம் கண்டுபிடித்த மூவரில் ஒருவரான வில்லியம் ஷாக்லி தமது ஷாக்லி குறைகடத்தி ஆய்வகம் என்ற சிலிக்கான் குறைக்கடத்தி சில்லுகளை தயாரிப்பதற்கான முதல் நிறுவனத்தை நிறுவினார். இன்று உலகின் பல மிகப்பெரும் தொழினுட்ப நிறுவனங்களின் தலைமையகங்கள் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளன; இவற்றில் கூகிள், மோசில்லா பவுண்டேசன், சைமென்டெக் மற்றும் இன்டியூட் என்பனவும் அடங்கும். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
மற்ற சுவையான சுற்றுலாவிடங்கள்
|
Portal di Ensiklopedia Dunia