மஸ்துங் மாவட்டம்
மஸ்துங் மாவட்டம் (Mastung District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மஸ்துங் நகரம் ஆகும். மஸ்துங் நகரம், குவெட்டாவிற்கு தென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்ட எல்லைகள்![]() மஸ்துங் மாவட்டத்திற்கு வடக்கே குவெட்டா மாவட்டம், தெற்கே கலாத் மாவட்டம், கிழக்கே கட்சி மாவட்டம், தென்மேற்கே நுஸ்கி மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்மஸ்துங் மாவட்டம் தஸ்த் மஸ்துங் வட்டம், மஸ்துங் வட்டம், காத் கூச்சா வட்டம் மற்றும் கர்திகேப் வட்டம் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[3] மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,695 குடியிருப்புகள் கொண்ட மஸ்துங் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,13,271 ஆகும். பாலின விகிதம் 113.70 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 45.97% ஆகும்.[4][5]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,09,539 (35.07%) ஆக உள்ளனர்.[6] 40,374 (12.89%) மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[4] சமயச் சிறுபான்மையோர் 1,696 (0.54%) ஆக உள்ளனர். மொழிகள்இம்மாவட்டத்தில் பிராகுயி மொழியை 89.05% பேரும், பலூச்சி மொழியை 7.19% பேரும், பஷ்தூ மொழியை 2.12% பேரும், பிற மொழிகளை 1.64% பேரும் பேசுகின்றனர்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia