மாகே ஆறு
மாகே ஆறு (மாயாழிபுழா என்றும் அழைக்கப்படுகிறது), (இந்தியாவின் ஆங்கிலக் கால்வாய் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்தியாவில் உள்ள ஒரு ஆறு. இது கேரள மாநிலம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதியான மாகேவில் செல்கிறது. நிலவியல்இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலையின் வயநாடு மலைகளிலிருந்து உருவாகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 54 கி.மீ. ஆகும். இது மாகே பகுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு நரிபெட்டா, வாணிமேல், பெருவங்கரா, இய்யங்கோடு, இரிங்கனூர், திரிபங்கத்தூர், பெரிங்காளம், எடச்சேரி, கச்சேரி, ஏறாமலை, பாறக்கடவு, கரியாடு, கிடான்ஹி ஒளவிலம், குன்னுமக்கரா, அழியூர் கிராமங்கள் வழியே சுமார் 394 சதுர கிலோமீட்டர் நிலம் பாசனம் பெறுகிறது.[2] மாகே நகரின் வடக்கு எல்லையாக இந்த ஆறு உள்ளது. பொருளாதாரம்ஆற்று போக்குவரத்தின் மூலம் பெறும் பொருளாதாரப் பலன் குறைவாகவே உள்ளது. முன்னர் அருகே உள்ள கிராமங்களிலிருந்து பொருட்களைக் கொண்டு செல்ல இந்த ஆறு பயன்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஆற்றின் கரையோரத்தில் ஒரு மீன்பிடி துறைமுகத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப காரணங்களால், கட்டுமானத்தில் உள்ள துறைமுகம், கழிமுகம் அருகே உள்ள கடற்கரையில் உள்ளது. மாகே ஆற்றின் ஓரமாக நடைமேடை ஒன்று சுற்றுலா ஈர்ப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது மாகே, மஞ்சக்கலில் உள்ள நீர் விளையாட்டு வளாகத்திலிருந்து ஆற்றின் கரையில் உள்ள [மீன்பிடித் துறைமுகத்தின்] தடைநீர் பகுதி வரை புதுச்சேரி அரசாங்கத்தால் கட்டப்பட்டுகிறது.[3] சிறப்புகள்எம். முகுந்தனின் மகத்தான நாவலான மய்யழிக்கரையோரம் தீரங்கள் (பி. 1974 ; மலையாளம் "மாகே ஆற்றின் கரையில்"), இந்த நதியைக் கொண்டாடுகிறது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவில் "ஆங்கில கால்வாய்" என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் இது பிரித்தானிய ஆட்சிச் செய்த தெளிச்சேரியைப் பிரெஞ்சு ஆட்சியிலிருந்த மாகேவிலிருந்து பிரித்தது. இது கடவுளின் தேசத்தில் மிகவும் மாசுபட்ட ஆறாக உள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia