மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7

மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7 ( Mac OS X Lion Version 10.7) ஆனது மாக் இயங்கு தள வரிசையில் எட்டாவதும், இறுதியாகவும் மாக் கணினிகளுக்கும் செர்வர்களுக்கும் வெளி வந்த பதிப்பாகும். பெப்ரவரி 24, 2011 அன்று, இதன் முதல் மாதிரிப்பதிப்பு (11A390) ஆப்பிள் டெவலபேர் (Developer ) வலைப்பின்னல் சந்தாதாரர்களுக்கு வெளியிடப்பட்டது. இதன் வர்த்தக வெளியீடு ஜூலை 21, 2011 அன்று உத்தியோகப்பூர்வமாக வெளிடப்பட்டது. இதன் முதல் நாள் விற்பனை ஆனது 1 மில்லியனுக்கும் அதிகம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் ஐ மாக், மற்றும் ஆப்பிள் மடிக் கணணிகளுடனும் இது ஏற்கனவே நிறுவப்பட்டு வருகிறது.[1][2][3]

வன்பொருள் ஆதரவு (Hardware Support)

இதன் முதல் மாதிரிப்பதிப்பு ஆப்பிள் கணினிகளுடன் விற்பனை செய்யப்பட்ட திட நிலை வன்தகடுகளுக்கு (SSD ) ஆதரவு வழங்குமாறு வெளியானது எனினும் மற்றைய திட நிலை வன்தகடுகளுக்கு இன்றுவரை ஆதரவு அளிக்கும் வகையில் எந்த புதிய அப்டேட் களையும் ஆப்பிள் வெளிவிடவில்லை .

இயங்க தேவையான குறைந்தபட்ச வன்பொருள்

  • x86-64 மின்செயலி (CPU)
  • குறைந்தபட்சம் 2 GB நினைவகம்
  • குறைந்தபட்சம் 7 GB வெற்று வன்தகட்டு இடம்

பயனர் இடைமுகம் மாற்றங்கள்

மீள்வடிவமைக்கபட்ட அக்வா பயனர் இடைமுகம்(Aqua user interface) கூறுகள்.

மேற்கோள்கள்

  1. "Apple technology brief on UNIX" (PDF). Apple. Archived (PDF) from the original on September 17, 2012. Retrieved November 5, 2008.
  2. Apple Inc.(July 20, 2011). "Mac OS X Lion Available Today From the Mac App Store". செய்திக் குறிப்பு.
  3. "OS X Lion 10.7.5 Supplemental Update". October 4, 2012. Archived from the original on February 28, 2022. Retrieved February 28, 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya