மாக் ஓஎசு எக்சு மாவரிக்சு
ஓஎசு எக்சு மாவரிக்சு (OS X Mavericks) ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கணினிகளுக்கான மேசைக்கணினிகள் மற்றும் வழங்கிகளுக்கான இயக்கு தளம் மாக் ஓஎசு எக்சு தொடரில் பத்தாவது முதன்மைப் பதிப்பாகும். இது சூன் 10, 2013 அன்று ஆப்பிள் உலகளாவிய உருவாக்குனர் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு அக்டோபர் 22, 2013 அன்று பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இது மாக் செயற்பொருள் அங்காடியிலிருந்து (Mac App Store) விலையின்றிப் பெறும் வகையில் இற்றைப்படுத்தலாக வழங்கப்படுகிறது.[2][3] இப்பதிப்பில் மின்கலங்கள் நீண்டநேரம் பயன்படுத்தக்கூடியமை, ஃபைண்டர் மென்பொருளில் மேம்பாடுகள், ஐகிளவுட் ஒருங்கிணைப்பு, வல்லுனர்களுக்கு பிற மேம்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்பிளின் ஐஓஎஸ் செயற்பொருள்களும் ஓஎசு எக்சு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பதிப்புகள் பூனை/புலி வகைகளின் பெயரில் வெளியாயின; இதிலிருந்து விலக்காக இந்தப் பதிப்பு வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மாவரிக்சு என்ற கடலோர நகரை ஒட்டிப் பெயரிடப்பட்டுள்ளது.[2][4] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia