மாடப்புறா
மாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும். காட்டு மாடப் புறாக்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும், ஒவ்வொரு இறக்கையிலும் இரண்டு கருப்புப் பட்டைகள் தெளிவாகத் தெரியும். அதேசமயம் வீட்டு மற்றும் வீட்டிலிருந்து காட்டுக்கு வந்த புறாக்கள் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபடுகின்றன. ஆண் பறவைகளுக்கும் பெண் பறவைகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த இனம் பொதுவாக ஒரு வாழ்க்கைத் துணையைக் கொண்டது. இவை இரு முட்டைகளை இட்டு, ஆணும் பெண்ணும் மாறிமாறி அடைகாக்கும். இதன் வாழ்விடங்களில் பல்வேறு திறந்த மற்றும் அரை-திறந்த சூழல்கள் அடங்கும். இந்தப் புறாக்கள் பாறை இடுக்குகள், கோபுரங்கள், மாடங்கள் போன்றவற்றில் உள்ள பொந்துகளில் கூடமைத்து முட்டையிட்டடு இனப்பெருக்கம் செய்கிறது. முதலில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆசியாவில் காடுகளாகக் காணப்பட்ட புறாக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பரவியுள்ளன. இந்த இனங்கள் ஏராளமாக உள்ளன, ஐரோப்பாவில் மட்டும் 17 முதல் 28 மில்லியன் மாடப் புறாக்கள் மற்றும் உலகளவில் 120 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1][3] ![]() மாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன. கிளையினங்கள்இதில் ஒன்பது கிளையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[4]
வாழ்க்கை சுழற்சி நிலைகள்
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia