மாட் பிரியர்
மத்தியூ ஜேம்ஸ் பிரையர்: (Matthew James Prior, பிறப்பு: பெப்ரவரி 26, 1982), இங்கிலாந்து குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. ஆரம்பகால வாழ்க்கைதென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தார், 11 வயதில் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். இவரது தாய் தென்னாப்பிரிக்கர், தந்தை இங்கிலாந்தினைச் சேர்ந்தவர் ஆவர்.[1][2] இவர் முன்னதாக பிரைட்டன் கல்லூரியில் பயின்றார், அந்த நேரத்தில் இவர் சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் விளையாடத் தொடங்கினார். தனது ஆரம்ப ஆண்டுகளில் செயின்ட் மத்தியாஸ் சி.சி.யில் துடுப்பாட்டம் விளையாடினார். ஆர்செனல் கால்பந்துக் கழகம் மற்றும் பிரைட்டன் & ஹோவ் ஆல்பியன் ஆகியோருக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் சமி நெல்சனின் மகள் எமிலியை இவர் திருமணம் செய்து கொண்டார்.இந்தத் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்த ஜொனாதன் என்ற மகனும், 27 ஜூன் 2015 இல் பிறந்த மகளும் உள்ளனர். சைக்கிள் ஓட்டுவதில் தனக்கு "அதீத ஆர்வம்" இருப்பதாக பிரியர் கூறியுள்ளார், மேலும் இங்கிலாந்து நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தனது இருசக்கர வாகனத்தினை தன்னுடன் எடுத்துச் சென்றதற்காக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் கெவின் பீட்டர்சன் விமர்சனத்திற்கு ஆளானார்.[3] முன்னதாக ஒன் புரோ சைக்கிள் ஓட்டுதலின் இணை உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாகி ஆவார். 20062004 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்: இவர் இயன் பெலுடன் துவக்க வீரராகத் தெரிவு செய்யப்பட்டார், மேலும் எட் ரெய்ன்ஸ்ஃபோர்டால் இந்தப் போட்டியில் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டமிழக்கப்படுவதற்கு முன்பு 35 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஓராண்டு கழித்து இங்கிலாந்து அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். தொடரின் முதல் போட்டியில் இவர் 45 ஓட்டங்கள் எடுத்தார், இந்தப் போட்டியில் இங்கிலாந்து 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இவர் 32 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் இங்கிலாந்து ஏழு இழப்புகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரினை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடரின் முதல் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடிய போதிலும் மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை.தொடரின் நான்காவது போட்டியில் 6 ஓட்டங்களும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 ஓட்டங்களும் எடுத்தார்.இறுதிப் போட்டியில் இவர் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வென்ற்றி பெற்று தொடரினை 3-2 எனும் கணக்கில் முடிந்தது இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் முன்னதாக அணியில் தனது இடத்தைப் பிடித்தார். முதல் ஆட்டத்தில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் இவர் 33 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் இங்கிலாந்து மீண்டும் தோல்வியடைந்தது.அடுத்த போட்டியில் 37 ஓட்டங்களில் இவர் ரன் அவுட் ஆனார். இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோற்றது. தொடரின் நான்காவது போட்டியில் பிரியர் 14 ஓட்டங்கள் எடுத்தார், இங்கிலாந்து துடுப்பாட்ட அணி மீண்டும் தோல்வியடைந்தது. தொடரின் ஐந்தாவது போட்டியில் இவர் விளையாடவில்லை. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia