மாதவன் ஐயப்பத்து
மாதவன் ஐயப்பத்து (Madhavan Ayyappath) இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலையாள மொழிக் கவிஞராவார்.1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். கேரள சாகித்திய அகாதமி விருது மாதவன் ஐயப்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.[1] வாழ்க்கைக் குறிப்பு1934 ஆம் ஆண்டு மாதவன் ஐய்யப்பத்து திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னாம்குலம் அருகே இருக்கும் சோவனூரில் மாதவன் ஐய்யப்பத்து பிறந்தார். பெரிங்கோட்டு கருமதில் ராமுன்னி நாயரும் ஐய்யப்பத்து லட்சுமிக்குட்டி அம்மாவும் இவருடைய பெற்றோர்களாவர். மாதவன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார் . தொடர்ந்த இதே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [2] மாதவன் ஐயப்பத்தின் மனைவியின் பெயர் டி.சி. ரமாதேவியாகும். குழந்தைகள்: சஞ்சய் டி.மேனன் மற்றும் மஞ்சிமா டி. சி என்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பேரக்குழந்தையின் பெயர் அசுரே மேனன் ஆகும். படைப்புகள்
விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia