மாதொருபாகன் (புதினம்)
மாதொருபாகன் என்பது பெருமாள் முருகன் எழுதி 2010 இல் தமிழ்நாட்டில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இந்தப் புதினம் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய ஒடுக்குமுறை நிறைந்த ஒரு சமூகம் எதிர்த்து அந்த தம்பதியரை அழிப்பதையும் பற்றிய புதினக் கதை ஆகும்.[1] இந்தப் புதினத்தின் உள்ளடக்கத்தை இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும் எதிர்த்தன. இதனால் பெருமாள் முருகன் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கினார். இதனால் இவர் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகக் கூறி உள்ளார். மொழிபெயர்ப்புஇந்தப் புதினம் ஆங்கிலத்தில் வன் பார்ட் ஃவுமன் (One Part Woman) என்று அநிருத்தன் வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வகைப்பாட்டில் 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.[2][3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia