மாத்தளை7°28′18″N 80°37′28″E / 7.47167°N 80.62444°E
மாத்தளை (romanized: Māttaḷai) இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 364 மீட்டர் (1,194 அடி) உயரத்தில் மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமாகவும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகவும் உள்ளது. மாத்தளை இலங்கையின் மலைநாட்டில் கொழும்பிலிருந்து 142 கிலோமீட்டர் (88 மைல்) தொலைவிலும், கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மிகப் பிரச்சித்தமான வணக்கத்தளமாகும்.[1][2][3] புவியியலும் காலநிலையும்மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. கைத்தொழில்இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. பிரசித்தமானவர்கள்
உசாத்துணைகள்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia