மாத்து மாவட்டம்
மாத்து மாவட்டம் (மலாய் மொழி: Daerah Matu; ஆங்கிலம்: Matu District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். முக்கா பிரிவு நிறுவப்படுவதற்கு முன்பு; மாத்து மாவட்டம், சரிக்கே பிரிவுக்குள் இருந்தது. இந்த மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள்தொகையில் மெலனாவு மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மெலனாவு மக்களுக்கு அடுத்தபடியாக சீனர்கள் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்டவர்களாக உள்ளனர். 2020-இல் மாத்து மாவட்டத்தின் மக்கள் தொகை 21,400. மாத்து - தாரோ மாவட்ட மன்றத்தின் (Matu-Daro District Council) அலுவலகம் மாத்து நகரில் அமைந்துள்ளது. மாத்து - தாரோ மாவட்ட மன்றத்தின் கட்டிடம் மாத்துவில் உள்ள ஒரு முக்கிய அடையாளச் சின்ன்மாகவும்; மற்றும் மிகப்பெரிய கட்டிடமாகும் உள்ளது. பொதுமாத்து நகரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக அரிதாகவே அடையாளம் காணப்பட்டது. தற்போது, சிபுவில் இருந்து சாலை வழியாக மாத்து நகரத்தை அடையலாம். மாத்து நகரம் விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது மாத்து நகரம் உலர்ந்த இறால் பொருட்களுக்குப் பிரபலமானது. மாத்து நகரத்திற்கு அருகிலுள்ள நகரம் தாரோ. அது சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia