மாந்த இனமும் மரபியலும்மாந்த இனமும், மரபியலும் (Race and Genetics) சார்ந்த உறவு, மாந்த இன வகைபாட்டுச் சிக்கலுக்கு மேலும் தெளிந்த விளக்கம் தர உதவும். நடைமுறை வாழ்வில் புறத்தோற்ற வகைமையை வைத்தும் வாய்ப்புள்ள புவிப்பரப்பியல் மூதாதையர் கால்வழி மனப்பதிவுகளைக் கொண்டும் பல சமூகங்கள் மாந்தரைக் குழுக்களாகப் பிரிக்கின்றன. அமெரிக்காவில் இவ்வகை மாந்தக் குழுக்கள் "இனங்கள் (Races)" என அழைக்கப்படுகின்றன. மாந்தரின மரபியல் பண்புகளின் வேறுபாட்டுப் பாணிகள் மக்கள்தொகைத் திரள்களுக்குள் அமையும் பண்பு, நிகழ்வெண்ணின் உடனடியான சரிவுமாற்றம், படிப்படியான தொடர்மாற்றம் எனும் இருவகை மாற்றங்களாலும் நேர வாய்ப்புள்ளதால் புறத்தோற்றப் பண்புகளின் கொத்துகளைத் தனித்தனிப் புவிப்பரப்பியல் சார்ந்த மாந்தரின மூதாதைக் கால்வழியோடு புள்ளியியலாக ஒட்டுறவுபடுத்த முடியும். நெடுங்காலமாக ஒன்றாக ஊடாட்டம் புரிந்தபடி வாழும் மக்கள்தொகைகளில் மரபன்மாற்றுருக்களின் நிகழ்வெண்கள் கொத்துகளாகின்றன. இது சுற்றக் குழுக்களின் அகமண வாழ்வாலும் கால்வழிகளாலும் அல்லது தேசிய, பண்பாட்டு, மொழிசார் எல்லைநெருக்க உறவுகளாலும் ஏற்படலாம். மக்கள்தொகைக் குழுக்களில் உள்ள மரபன் மாற்றுருக்களை ஆயும்போது, மரபியல் கொத்துகளை அத்தகைய மக்கள்தொகைகளுடன் புள்ளியியலாக ஒட்டுறவுபடுத்த முடிகிறது. இதேபோல மாந்த மரபியல் வேறுபாட்டு பகுப்பாய்வு, குறிப்பிட்ட தனியரின் புவிப்பரப்பியல் மூதாதையரைக் கண்டறியவும் அதன்வழியாக அம்மூதாதையரின் தொடக்கநிலை நகர்வு அல்லது புலம்பெயர்வு வரலாற்றைச் சுட்டிக் காட்டவும் முடிகிறது. அப்படியே ஊகமுறையால் குறிப்பிட்ட சமூகத்தில் அவர்களை வகைபடுத்த வாய்ப்புள்ள இனவகையையும் துல்லியமாக நிறுவ முடிகிறது. இவ்வாறு மரபன் நிகழ்வெண்களுக்கும் இனவகைகளுக்கும் இடையே தெளிந்த புள்ளியியலான ஒட்டுறவு அமைகிறது. என்றாலும் அனைத்து மக்கள்தொகைகளும் மரபியலாக பன்முகப்பட்டிருப்பதாலும் மூதாதைக் கால்வழிகள், மரபியல் கட்டமைப்பு, புறத்தோற்றம் ஆகியவற்றுக்கிடையில் சிக்கலான உறவு அமைவதாலும், இனவகைமைகளின் பண்புகளைத் தற்சார்பின்றி புறநிலையாக மதிப்பிட இயலாமையாலும், தனியரின் இனத்தை வரையறுக்க குறிப்பிட்ட மரபன் எதையும் பயன்படுத்த முடியாது. பெரும்பாலான உடல்சார் மாந்தரினவியலாளர்கள் இன வகைபாட்டை முதன்மைநிலையில் உயிரியல் வேறுபாட்டைச் சாராத சமூக வகையினமாகவே கருதுகின்றனர். என்றாலும் சில அறிஞர்கள், குறிப்பாக குற்றத்தடயவியலாளர்கள், இனத்தை உயிரியல் வகையினமாகக் கருதுகின்றனர். இவர்கள் தொல்லுடல் எச்சங்களில் இருந்து பேரளவு உறுதிப்பாட்டோடு மாந்த இனத்தைத் தீர்மானிக்கலாம் என வாதிடுகின்றனர்; இவ்வாறு இனங்காணப்பட்டது புறத்தோற்ற வகைமை மட்டுமே எனலாம். பல்வேறு புவிப்பரப்பு மூதாதைக் கால்வழி மக்கள்தொகைகளில் பல்வேறு நிகழ்வெண்களில் அமையும் பல்வேறு மரபுவழியாகப் பெறப்படும் நோய்களையும் நலிவுகளையும் மதிப்பிட இனவகையினங்களைப் பயன்கொள்ள இயலும் என மருத்துவர்கள் வாதிடுகின்றனர். வேறு சிலரோ, தனியர்களின் உயர் இடர்வாய்ப்பின் தனித்தன்மையை, குறைந்த இடர் வாய்ப்புள்ள இனத்தில் இருந்தும், இனக்குழுவில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்க மறுப்பதால் இது சிக்கலானதாகும் எனவும் அதனால் மக்கள்தொகைகளின் இடர்வாய்ப்பைக் கூடுதலாக்கி, அதை மிகைப்பட மதிப்பிட வழிவகுக்கும் எனவும் கூறுகின்றனர். மரபியல் வேறுபாடுகள்முதன்மைக் கட்டுரை:மாந்தரின மரபியல் வேறுபாடுகள் மரபியல் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் சடுதிமாற்றங்களாலும் ,மக்கள்தொகைகளிடையே நிகழும் மரபன் பாய்வுப் பெயர்வாலும் பாலியல் இனப்பெருக்காத்தால் மரபன்கள் ஊடுகலப்பு நிகழ்தலாலும் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மேலும் இயற்கைத் தேர்வாலும் மரபன்களின் பெயர்வாலும் எதிர்க்கப்படுகின்றன; ஒரு மக்கள்தொகை சிறு எண்ணிக்கையில் அமையும்போது அதில் நிறுவனர் விளைவால் சிற்றளவு மரபியல் மாற்றமே ஏற்படும். மரபியல்சாராத மரபுப்பேறு என்பது மரபாகப் பெறவியன்ற புறத்தோற்ற மாற்றங்களாலோ அல்லது மரபன் வரிசைமுறையைச் சாராத இயங்கமைவுகளால் ஏற்படும் மரபன்கோவையாலோ ஏற்படலாம். மாந்தப் புறத்தோற்ற வகைமைகள் பல்மரபனியல்பு கொண்டவை; அதாவது பல மரபன்களின் ஊடுகலப்பால் ஏற்படுபவை. மேலும் அவை சுற்றுச்சூழல் விளைவாலும் தாக்கமுறுபவை. கருவன் பன்மை என்பது தனிச் சடுதி மாற்றங்களால் அதாவது தனி ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களால் உருவானது. இது மாந்தரினத்தில் தனியருக்கிடையில் 0.1 % அளவில் அமைகிறது (அதாவது தந்தோன்றியபோக்கில் தேர்வுசெய்த ஏதாவது இரு மாந்தர்களுக்கிடையில் ஓராயிரம் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களில் ஒரேயொரு மாற்றம் அல்லது வேறுபாடு நிலவுகிறது). மாந்த மரபன்தொகையில் மூன்று பில்லியன் கருவன்கள் உள்ளதால், இம்மாற்றங்கள் தோராயமாக, மூன்று மில்லியன் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களுக்குச் சமமாகும். மாந்தரின முழுவதிலும் ஒருகோடி ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைக் கருவன் பன்மையை விட, ஒகபவைச் சாராத வேறுபாடுகளே மாந்த மரபியல் மாற்றங்களைப் பெரிதும் தீர்மானிக்கின்றன என அண்மை ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வகைக் கட்டமைப்பு மாற்றம் படிஎண்ணிக்கை மாற்றத்தையும் உள்ளடக்குகிறது. இது மரபியல் நீக்கங்கள், குறுமவகத் தலைகீழாக்கங்கள், மரபன் இரட்டிப்புகள், ஆகியவற்றின் விளைவால் ஏற்படுகிறது. படிஎண்ணிக்கையைத் தவிர, உறவில்லாத மக்களின் மரபன்தொகைகளில் மாந்த மரபியல் மாற்றம் தோராயமாக 0.4 % அளவாக அமைகிறது. படிஎண்ணிக்கை வேறுபாட்டையும் உள்ளடக்க, இது குறைந்தது 0.5 % அளவுக்கு கூடுகிறது. மாந்தரினக் கால்வழி, மக்கள்தொகை மரபியல் கட்டமைப்பு ஆய்வு முறைகள்புறத்தோற்றப் பண்புகள், புரதங்கள், மரபுப்பேற்றுப் பண்புகள் ஆகியவற்றின் மரபியல் ஆய்வுகள்தொடக்க காலத்தில் மாந்தரின வகைப்பாடு மேற்பரப்பு உடலுருவ அளவு மாற்றங்களைப் பயன்படுத்தியது. மரபணுவைக் கண்டறிவதற்கு முன் அறிவியல் அறிஞர்கள் குருதிப்புரதத்தைப் பயன்படுத்தினர்]] அடுத்தநிலையில் மாந்தரின மரபியல் வேறுபாட்டை ஆய்வு செய்ய முதல் உலகப்போரின்போது உலூத்விக்கும் எர்ழ்சுபீல்டும் (Ludwik and Hanka Herschfeld) தம் ஆய்வில் வட்டாரத்துக்கு வட்டாரம் குருதிக்குழுக்கள் ஏவும் பீயும் (A and B) வேறுபட்டு அமைதலைக் கண்டனர்;எடுத்துகாட்டாக, ஐரோப்பியர்களில் பீ குழுவில் 15% அளவு மக்களும் ஏ குழுவில் 40% அளவு மக்களும் அமைதல் கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பியர்களிலும் உருசியர்களிலும் பீ குழுவில் கூடுதலானவர் அமைந்தனர்; இந்தியர்களில் பீ குழு பெரும அளவில் உள்ளது. எர்சுபெல்டுசு இருவகை உயிர்வேதியியல் குழுக்கள் முதலில் தனித்தனியாகத் தோன்றின எனும் முடிவுக்கு வந்து மேலும் இந்த இருகுழுக்களும் பின்னர் இணைந்ததால் ஏ, பீ குழுக்கள் உருவாகியுள்ளன என்கிறார். இது தான் இன வேறுபாடு பற்றிய மாந்த புற வேறுபாடுகலை உள்ளடக்கிய முதல் கோட்பாடாகும். ஆனால், இது மரபியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஒத்த குருதிக்குழுக்களைக் கொண்ட மாந்தக்குழுக்கள் மிக நெருங்கிய உறவுடையனவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெடுந்தொலைவில் உள்ள மாந்தக் குழுக்களிலும் ஒத்த குருதிக்குழுக்கள் நிலவுதல் கணடறியப்பட்டது. அதாவது மடகாசுகர், உருசியா சார்ந்த மாந்தஜ்க்குழுக்களிலும் ஒத்த குருஇதிக்குழுக்கல் நிலவுவது அறியவரலானது.[1] மேலும் ஏபிஓ (ABO) குருதிக்குழு மாந்தருக்கு மட்டுமன்றி, உயர்பாலூட்டிகளுக்கும் பொதுவாக அமைவது பிறகு கண்டறியப்பட்டது.[2] எனவே இந்தக் குருதிக்குழு அனைத்து மாந்தக்குழுக்களை விட முந்தையதாகும்.[3] அண்மை ஆய்வாளர்கள் மரபியல் ஓர்வுகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பல ஆயிரக் கணக்கான மரபுக் குறிப்பான்களோ அல்லது முழு மாந்த மரபன்தொகையுமோ அமைகிறது. மக்கள்தொகை மரபியல் கட்டமைப்பும் மரபியல் தொலைவும்மக்கள்தொகை மரபியல் கட்டமைப்பு![]() கொத்துப் பகுப்பாய்வு, முதன்மைஉறுப்புப் பகுப்பாய்வு போன்ற பலமுறைகள் மரபியல் துணைக்குழுக்களை ஆய்ந்து அளந்து மதிப்பிட உருவாகியுள்ளன. மக்கள்தொகை மரபியல் கட்டமைப்பைக் கண்டறிய தனியர்களின் மரபுக் குறிப்பான்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒரேயொரு குறிப்பானின் மாறிகளை ஆயும்போது துணைக்குழுக்கள் ஒன்றின்மேலொன்று படிந்தால், பல குறிப்பான்களைக் கருதும்போது வேறுபட்ட துணைக்குழுக்கள் வேறுபட்ட நிரல் (சராசரி) மரபியல் கட்டமைப்பு கொண்டமைதல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தனியர் பல துணைக்குழுக்களைச் சார்ந்தவராக அமைய வாய்ப்புள்ளது. துணைக்குழுக்கள் மற்றவற்றோடு எந்த அளவுக்கு மேற்படிந்துள்ளன என்பதைப் பொறுத்து இத்துணைக்குழுக்கள் ஓரளவு தெளிவாகப் பிரிந்திருக்கும்.[5] கொத்துப் பகுப்பாய்வில், முன்கூட்டியே Kவைத் தேடுவதற்கான கொத்துகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது; கொத்துகள் எத்துணையளவு தெளிவாகப் பிரிந்துள்ளன என்பதும் வேறுபடும். கொத்துப் பகுப்பாய்வில் இருந்து பெறப்படு முடிவுகள் பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளன:
மரபியல் தொலைவுமரபியல் தொலைவு ஒரே இனத்தின் மக்கள்தொகைகளுக்கிடையில் அல்லது இனங்களுக்கிடையில் அமையும் மரபியல் விலக்கம் ஆகும்.இது சார்புள்ள இனங்களுக்கிடையில், அதாவது மாந்தருக்கும் சிம்பஞ்சிகளுக்கும் இடையில் கூட அவற்றின் மரபியல் ஒற்றுமையளவைக் காண ஆய்வு செய்யப்படுகிறது. ஒரே இனத்துக்குள் மரபியல் தொலைவு அதன் துணைக் குழுக்களின் மரபியல் விலக்கத்தை அறிய உதவுகிறது. மரபியல் தொலைவு, மக்கள்தொகைகளின் புவிப்பரப்பியல் தொலைவோடு பொருந்திப் போகிறது. இந்நிகழ்வு, சிலவேளைகளில் தொலைவுசார் பிரிவு என வழங்கப்படுகிறது.[11] மரபியல் தொலைவு தீவுகள், பாலைநிலங்கள். மலைகள், காடுகள் போன்ற புறநிலை எல்லைகளால் மரபன் பாய்வு கட்டுப்படுவதால் ஏற்படலாம். மரபியல் தொலைவு, FST எனும் நிலைச்சுட்டெண் வழி அளக்கப்படுகிறது. FST எனும் நிலைச்சுட்டெண் என்பது பெரிய மக்கள்தொகைக்கும் உட்குழுவுக்கம் இடையில் அமையும் தான்தோன்றிப் போக்கான மரபன் தனிமங்களின் அல்லது மரபன் மாற்றுகளின் ஒப்புறவாகும். இது அடிக்கடி, மரபியல் பன்மையின் விகிIதமாக வரையறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் உள்ள மரபியல் வேறுபாட்டை ஒப்பிடுவது மக்கள்தொகை மரபியலில் பயன்படுத்தப்படுகிறது. மரபியல் வேறுபாடு 0 முதல் 1 வரையில் அமையும்; சுழி மதிப்பு இரு மக்கள்தொகைகளும் கட்டற்ற போக்கில் இனப்பெருக்கம் செய்வதைக் குறிப்பிடுகிறது; ஒன்று மதிப்பு இரு மக்கள்தொகைகளும் பிரிந்து வாழ்வதைக் குறிப்பிடுகிறது. வரலாறும் புவிப்பரப்பியலும்காவல்லி சுஃபோர்சா மூதாதையர் கால்வழி ஆய்வில் இருமுறைகளை விவரித்துள்ளார்.[12] அவை புவிப்பரப்பியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு என்பனவாகும்.அண்மை மரபியல் கட்டமைப்பு ஆய்வு, வேறுபடும் கொத்துகள் அல்லது உறுப்புகள் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரே மூதாதையர் தோன்றிடத்தைக் குறிப்பதில்லை எனச் சுட்டிக் காட்டுகின்றன; எடுத்துகாட்டாக, அமெரிக்காவில் உள்ள ஒரு மரபியல் கொத்தில் ஆப்பிரிக்க மூதாதை, அமெரிக்கத் தோற்ற மூதாதை, ஐரோப்பிய மூதாதை ஆகியக் கூட்டுக் கலப்பு காணப்படுகிறது.[6] புவிப்பரப்பியல் ஆய்வு, மாந்தர் தோன்றிய இடத்தையும் அவற்றின் சார்பு முதன்மையையும் அப்பகுதியின் மரபியல் வேறுபாட்டுக்கான காரணங்களையும் இனங்கான முயல்கிறது. முடிவுகள் மரபியல் வேறுபாட்டுப் படங்களாகக் காட்டப்படும்.காவல்லி-சுபோர்சா குழுவினர் மரபியல் வேறுபாடுகளை ஆயும்போது, அவை மேம்பட்ட போக்குவரத்து அல்லது புதிய உணவு வாயிலைத் தேடி செல்லும் மக்கள் புலம்பெயர்வாலோ அரசியல் அதிகாரம் சார்ந்த இடம்பெயர்வாலோ அமைகிறது என வாதிடுகின்றனர். எடுத்துகாட்டாக, ஐரோப்பாவில் மிக கணிசமான மரபியல் வேறுபாட்டுத் திசை, 10,000 முதல் 6000 க்கு முன்பான காலகட்டம் சார்ந்த, நடுவண் கிழக்கில் இருந்து ஐரோப்பாவை நோக்கிய வேளாண்மை பரவலோடு பொருந்திப் போகிறது.[12] இத்தகைய புவிப்பரப்பியல் பகுப்பாய்வு, அண்மைக்காலம் போன்ற விரைந்த பேரளவு புலம்பெயர்வு இல்லாதபோது நன்கு செயல்படுகிறது. வரலாற்று ஆய்வு, மரபியல் தொலைவால் அளக்கப்படும் மரபியல் மாற்ற வேறுபாடுகளை ஆய்கிறது. இது மூலக்கூற்றுக் கடிகாரம் எனப்படுகிறது. இம்மூலக்கூற்றுக் கடிகாரம் இனங்கள் அல்லது குழுக்களின் படிமலர்ச்சி உறவைக் காட்டும். இதைக் கொண்டு மக்கள்தொகைப் பிரிவு விலக்கத்தைக் காட்டும் படிமலர்ச்சித் தருவை உருவாக்கலாம்.[12] மரபியல் மூதாதைக் கால்வழி ஆய்வின் சரித்தன்மையை நிறுவல்மரபியல் மூத்தாதைக் கால்வழி ஆய்வு முடிவுகள் மற்ற புலங்களாகிய தொல்லியல், மொழியியல் முடிவுகளோடு ஒத்துப்போனால் சரித்தன்மை வாய்ந்த்தாக்க் கருதப்படும்.[12] காவல்லி-சுபோர்சா குழுவினர் தங்களது 1994 ஆய்வின் மக்கள்தொகைத்தரு மொழி ஆய்வின் மொழிக்குடும்பங்களோடு பொருந்திப் போவாதாக வாதிடுகின்றனர். ஒரே மொழிக்குடும்ப மொழிகளைப் பேசும் மக்கள்தொகைகளுக்கிடையில் பொதுவாக மரபியல் தொலைவுகள் குறுகியதாக அமைவதைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஒரே விதிவிலக்கு சாமி இனக்குழுவினர் ஆகும். இந்த இனக்குழுவில் உள்ள மக்கள்தொகைகள் பல மொழிக்குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர். சாமி இனக்குழுவினர் யுராலிய மொழிகளைப் பேசினாலும் இவர்கள் பொதுவாக ஐரோப்பியர்களே. இந்நிலை புலம்பெயர்வாலும் ஐரோப்பியருடனான கூட்டுக் கலப்புறவாலும் ஏற்பட்ட்தாக்க் கருதப்படுகிறது. தொல்லியல் ஆய்வுக் கால வரையறுப்பும் மரபியலில் கணித்த மரபியல் தொலைவோடு பொருந்துகிறது.[7][12] மூதாதைக் கால்வழி மக்கள்தொகைகள்காவல்லி-சுபோர்சா குழுவினரின் 1994 ஆண்டின் ஆய்வு 120 குருதிப் பல்லுருவாக்கங்களைப் பயன்படுத்தி 42 பிறப்பிட மக்கள்தொகைகளின் மரபியல் தொலைவுகளை மதிப்பிட்டனர். இதன்படி உலக மாந்தரினம் ஒன்பது கொத்துகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆப்பிக்கவகை (உள்சகார வகை), காக்கசாயிடு வகை (ஐரோப்பிய வகை), காக்கசாயிடுவகை (கூடுதல் ஐரோப்பிய வகை), வடக்கு மங்கோலிய வகை (ஆர்க்டிக் மக்கள்தொகை நீங்கலாக), வடகிழக்கு ஆசிய ஆர்க்டிக் வகை, தெற்கு மங்கோலிய வகை (ஆசியக் கண்டமும் தனித்த தென்கிழக்கு ஆசியாவும்), பசிபிக் தீவினர், நியூகினியரும் ஆத்திரேலியரும், அமெரிக்கர் (அமெரிக்க இந்திய வகை) என்பனவாகும்.இந்தக் கொத்துகளிடையே வேறுபட்ட அளவில் ஒருபடித்தன்மை நிலவினாலும், இந்த ஒன்பது கொத்துப் படிமம் பெரும்பாலான (120 இல் 80 வரையிலான) ஒற்றைப் பண்புத் தருக்களை உருவகிக்கிறது. மேலும் இப்படிமம் உலக மக்கள்தொகைகளுக்கிடையிலான வரலாற்றியலான தொகுதிமரபு உறவைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.[4] ஆப்பிரிக்கா, ஓசியானா ஆகிய இரு கண்டங்களுக்கிடையே மிகப் பெரும மரபியல் தொலைவு வேறுபாடு அமைகிறது. இவ்வேறுபாட்டின் மதிப்பளவு 0.2470 ஆகும். ஆனால், புறத்தோற்ற வேறுபாட்டை ஒப்பிடும்போது இந்நிலை முற்றிலும் எதிர்மறைத்தன்மை உடையதாக அமைகிறது. ஏனெனில், ஆத்திரேலியப் பிறப்பிட மக்கள்தொகையும் நியூகினியரும் ஆப்பிரிக்கரை கருப்பு நிறத்திலும் சுருட்டை முடியிலும் ஒத்துள்ளனர். இந்த மரபியல் தொலைவு வேறுபாட்டின் அளவு, ஆத்திரேலியாவும் நியூகினியாவும்கடைசிப் பனியூழிப் பெருமநிலையில் கடல்நீர் மட்ட எழுச்சியால் ஆசியாக் கண்ட்த்தில் இருந்து தனித்துப் பிரிந்து விட்டதைக் காட்டுகிறது. அடுத்த பெரும மரபியல் தொலைவு வேறுபாடு ஆப்பிரிக்கருக்கும் தென் அமெரிக்க இனக்குழுவினருக்கும் இடையே அமைகிறது. இவ்வேறுபாட்டின் மதிப்பளவு 0.2260 ஆகும். ஆப்பிரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் புவிப்பரப்புத் தொலைவை ஒப்பிடும்போது இவ்வேறுபாடு எதிர்பார்க்க்க்கூடியதே. மிகச் சிறும மரபியல் தொலைவு வேறுபாடு, 0.0155 ஆக உள்ளது. இது ஐரோப்பியருக்கும் வெளி ஐரோப்பிய காக்காசியருக்குமிடையே அமைகிறது. ஆப்பிரிக்கா மட்டுமே மரபியலாக மிகவும் உயர்ந்த பன்மைத்தனமை வாய்ந்த கண்டமாக உள்ளது. மற்ற அனைத்துக் குழுக்களும் உட்சகாரா ஆப்பிரிக்கரை விட ஒன்றுக்கொன்று நெருங்கிய மரபியல் தொலைவைக் கொண்டுள்ளன. இது அண்மைய மாந்தரின ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டின்படி, எதிர்பார்க்க்க்கூடியதே. மற்ர கண்டங்களோடு ஒப்பிடும்போது ஐரோப்பிய மக்கள்தொகைகளின் மரபியல் தொலைவு மும்மடங்கு சிறியதாக அமைகிறது; ஐரோப்பாவோடு ஒப்பிடும்போது ஆசியா ஆப்பிரிக்காவின் மரபியல் பங்களிப்பு முறையே மூன்றில் இருபங்காகவும் மூன்றில் ஒருபங்காகவும் உள்ளது.[4][12] கூடுதல் மரபியல் குறிப்பான்கள் பயன்படுத்திய அண்மை ஆய்வுகள் பல வெளியிடப்பட்டுள்ளன.[7][10][13][14][15][16] இனமும் மக்கள்தொகை மரபியல் கட்டமைப்பும்மாந்த இனம் குறித்த விவாதம் உயிரியல் இனத்தோடு (சிறப்பினத்தோடு) ஒன்றிய அல்லது மேற்படிந்த சிக்கலாகக் கருதப்படுகிறது. அறிவியலாளர்கள் 1960கள் முதலாகவே, இனத்தை உய்ரியல் கருத்துப்படிமமாகக் கருதாமல் பண்பாட்டியலாகப் புறத்தோற்ற வகையால் உருவாகிய சமூகக் கட்டுமானமாகவே கருதிவருகின்றனர்.ஆனால், 2000 ஆம் ஆண்டின் செலெரா மரபன்தொகை ஆய்வு மாந்தரின மக்கள்தொகைகளுக்கிடையே உள்ள மரபனில் (டி. என். ஏவில்) கணிசமாக வேறுபாடு இல்லாமையைக் காட்டியது. உலகின் எப்பகுதியிலும் உள்ல மாக்களிடையே 90% அளவுக்கே மரபியல் வேறுபாடு அமைகிறது. மரபன்களில் .01% அளவு மட்டுமே ஒரு தனியரின் புறத்தோற்ர வேறுபாட்டை உருவாக்குகிறது.[17] உயிரியல் தகவமைவே உடற்கூற்றிலும் தோல்வகைமையிலும் பெரும்பங்கு வகிக்கிறது. உலூகி உலூசா காவல்லி சுபோர்சா இன வேறுபாடுகள் பற்ரி பின்வருமாறு கூறுகிறார். "அறிவியல் கண்ணோட்டத்தில் (குறிப்பாக மரபியல் கண்ணோட்ட்த்தில்), மாந்த இனம் எனும் கருத்துப்படிமம், பொதுக் கருத்தேற்பை பெறவியலாமல், பொய்த்துப் போகிறது; இங்குப் படிப்படியாக ஏற்படும் மரபியல் வேறுபாடுகளை ஒப்பிடும்போது எந்த இனமும் உண்மையில்லை. இந்த இனவகைமை கல்லாதோராலும் ஊக்கிக்கமுடிந்த வகைப்படாகத் தோன்உவதைச் சுட்டி மறுப்பு கூறலாம். என்றாலும், தோல்நிறத்தையும் முடிநிறத்தையும் வடிவத்தையும் முகவெட்டையும் கொண்டு அறுதியிடும் இந்தப் பேரின வகைமைகள் மேற்போக்கான வேறுபாடுகளேயன்றி மரபியல் வகைமைப்பண்புகளை வைத்து ஆழமாக பகுத்தாயும்போது இவை உறுதிப்படுத்த இயலாதனவாகவே உள்ளன. இவை பெரும்பாலும் காலநிலையாலும் பாலியல் தேர்வாலும் உருவாகிய அண்மைய படிமலர்ச்சி வேறுபாடுகளாகவே அமைகின்றன".[4][18][19][20][21][22][23] மாந்தக் குழு அளவுபோதுமான மரபியல் குறிப்பான்களைப் பயன்படுத்தி ஆய்வு முறைகளால் மக்கள்தொகைகளின் மரபியல் வேறுபாடுகளைக் கண்டறியலாம்; இவ்வகையில் யப்பானைய, சீன கிழக்கசிய மக்கள்தொகைகள் இனங்காணப்பட்டுள்ளன.மற்ற மக்கள்தொகைகளை விட உட்சகாரா ஆப்பிரிக்க மக்கள்தொகையில் பேரளவு மரபியல் பன்மை அமைகிறது.[24] மாந்தக் குழுவிடை மரபியல் வேறுபாடுகள்பதினேழு மரபியல் குறிப்பான்களையும் (குருதிக்குழு புரதங்களையும் ) பயன்படுத்தி, 1972 இல் இரிச்சர்டு இலெவோண்டின் (Richard Lewontin) ஒரு FST புள்ளியியல் ஆய்வை மேற்கொண்டார். இவர் மக்கள்தொகைக்குள்ளே பெரும மரபியல் வேறுபாடும் (85.4 % வேறுபாடு) ஓரின மக்கள்தொகைகளுக்கிடையே 8.3% வேறுபாடும் காக்காசிய, ஆப்பிரிக்க, மங்கோலிய, தெற்காசிய, அமரிந்த, ஓசியானிய, ஆத்திரேலிய ஆகிய பல்வேறு பேரினங்களுக்கிடையே 6.3% மரபியல் வேறுபாடும் அமைவதைக் கண்டுபிடித்தார். இதற்குப் பின்னரான ஆய்வுகளின் FST மதிப்புகள், கண்டத்தில் உள்ல மாந்தக்குழுக்களில் 6–10% மரபியல் வேறுபாடும் ஒரே கண்ட்த்தில் உள்ள வேறுபட்ட மக்கள்தொகைகளுக்கிடையே 5–15% மரபியல் வேறுபாடும் பொதுவாக அனைத்து தனிதனி மக்கள்தொகைகளுக்குள்ளே 75–85% மரபியல் வேறுபாடும் அமைதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[25][26][27][28][29] இந்தக் கண்ணோட்டம் பின்னர் அமெரிக்க மாந்தரினக் கழகத்தாலும் அமெரிக்க உடல்சார் மாந்தரினக் கழகத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[30] இனக்குழு / இனம் உணர்திறம்மரபியல் தொலைவு கூடுதல்கொத்துகளின் எண்ணிக்கைஆய்வு செய்யப்படவேண்டிய கொத்துகளின் எண்ணிக்கையைப் பல்வேறு நிகழ்தகவு மதிப்புகளுடன் முன்தீர்மானிப்பாகக் கொள்வதால் கொத்துப் பகுப்பாய்வு பல முடிவுகளைத் தரும் வாய்ப்புள்ளதென பலரால் கருதப்படுகிறது).[31] பல்லுறுப்புப் பகுப்பாய்வு முன்தீர்மானிப்பாக தேடலுக்கான உறுப்புகளின் எண்ணிக்கையைக் கொள்வதில்லை,[32] எனவே இம்முறை கூடுதலான ஆய்வுகளில் பயன்படுகிறது.[சான்று தேவை] பயன்பாடுஇனமும் மருத்துவமும்முதன்மைக் கட்டுரை: இனமும் உடல்நலமும் அறிவியல் இதழ்களின் பயன்சில அறிவியல் இதழ்கள் முந்தைய முறையியல் பிழைகளைச் சுட்டிக்காட்டி மக்கள்தொகை மாறிகளை மேலும் சீரிய அணுகுமுறையில் சீர்தூக்கப்படவேண்டும் என வற்புறுத்தியுள்லன. 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இயற்கை மரபியல் ஆய்விதழ் தனது கட்டுரை ஆசிரியர்களை எப்படி குறிப்பிட்ட இனக்குழுக்களை அல்லது மக்கள்தொகைகளை பயன்படுத்துகிறார்கள் எனவும் அப்போது எப்படி வகைபாட்டை அவர்களால் அடையமுடிகிறது எனவும் விளக்குமாறு கோரியுள்ளது.” இந்த இதழின் பதிப்பாசிரியர்கள் இந்த வினவல் விழிப்புணர்வைக் கூட்டும் என்றும் மேலும் சீரிய மரபியல், கொள்ளைநோயியல் ஆய்வின் வடிவமைப்பை ஊக்குவிக்கும் என்றும் கூறுகிறார்கள்.”[33] மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia