மான்டேசொரி கல்விமான்டேசொரி கல்வி (Montessori education) என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும். இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி எனும் பெண்மணியால் இக்கல்வி முறை உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதுமாக சுமார் 20,0000 பள்ளிக்கூடங்கள், இக்கல்வி முறையை பின்பற்றுகின்றன.[1] மான்டேசொரி கல்வி என்பது சுதந்திரத்தை வலியுறுத்தி, அச்சுதந்திரத்தை வரையறைக்குள் கொண்டுவந்து, குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை மதிப்பதைக் குறிப்பதாக உள்ளது. மான்டேசொரி என்ற பெயரால் பலதரப்பட்ட பயிற்சிகள் வழக்கத்தில் இருந்தாலும், அகில உலக மான்டேசொரி சங்கம் (AMI) மற்றும் அமெரிக்க மான்டேசொரி சமூகம் கீழ்க்காணும் சில அடிப்படைக் கூறுகளை வரையறுத்துள்ளது:[3][4]
மேலும், பல மான்டோசொரி பள்ளிகள் மான்டோசொரியின் மனித மேம்பாட்டிற்கான மாதிரியையும் அவரது புத்தகங்களையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் பள்ளிக்கான செயல்முறை திட்டத்தை நிறுவிக்கொள்கிறார்கள். அத்துடன், மான்டோசொரியால் தன் வாழ்நாளில் அளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியரியல், பாடங்கள், மற்றும் மூலப்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.[சான்று தேவை] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia